வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...!
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகளிலும் பிப்ரவரி 6ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்கு பதிவில், 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் இருந்து மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டு வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் தேர்தல் பார்வையாளர் அஜய்குமார் குப்தா, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஈரோட்டில் பெரும் பின்னடைவு… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..? மில்கிபூரில் பாஜக படுஜோர்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 67.97 சதவீத வாக்குகள் 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளன.வாக்கு எண்ணும் மையத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 76 சிசி டிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள முகவர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, முறையான அடையாள அட்டை வைத்துள்ள நாம் தமிழர் கட்சி முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான ஊடகத்தையும் திமுக மதிப்பதில்லை என்றும், ஜனநாயக ரீதியிலான தேர்தலையும் மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கில் எப்போது ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களோ அப்போதே நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதாகவே அர்த்தம் என்றார்.
இதையும் படிங்க: பெரியாருக்கு எதிர்ப்பு, அண்ணாவுக்கு வாழ்த்து- என்னங்க சார் உங்க அரசியல்? சீமானை நோக்கி நீளும் விமர்சனம்