×
 

அப்படி என்னதாங்க இருக்கு புதிய வருமானவரி மசோதாவில்.. .

நாடாளுமன்றத்தில் இன்று புதிய வருமானவரிச் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய தண்டனை குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவற்றை மாற்றம் செய்த கையோடு 65 ஆண்டுகால வருமானவரி சட்டத்தையும் மாற்றுவதற்கான முயற்சியில் உள்ளது மத்திய அரசு. அதன்படி, நாடாளுமன்றத்தில் இன்று புதிய வருமானவரிச் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. 

சரி, இந்த புதிய வருமானவரி மசோதாவில் என்னென்ன இருக்கிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.. வருமானவரி என்றாலே புரியாத கலைச்சொற்களும், சட்டப்பிரிவுகளும் தான் நம்மை பயமுறுத்தும். இந்த புதிய மசோதாவின் முதன்மை நோக்கமே தேவையற்ற விதிகளை நீக்கி, வரிச் சட்டத்தின் மொழியை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமைப்படுத்துவதாகும். எளிய சொற்களில் விதிகளை புரிந்து கொள்ளவும், வரிசெலுத்த ஏதுவாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளதாம். 

தற்போதைய வருமான வரிச் சட்டம் 52 அத்தியாயங்களையும் 1,647 பக்கங்களையும் கொண்டுள்ளது. புதிய மசோதா 23 அத்தியாயங்கள் மற்றும் 622 பக்கங்களுடன் மிகவும் குறுகியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேவையற்ற பகுதிகளை நீக்கி, புரிந்துகொள்வதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பண வீக்கம், விலை உயர்வு, வேலையின்மை இல்லையா? எந்த கிரகத்தில் வாழ்கிறார் நிர்மலா? பிரியங்கா ஆவேசம்

புதிய மசோதாவின் முக்கிய மாற்றங்களில் ஒன்று 'வரி ஆண்டு' என்ற சொல்லை அறிமுகப்படுத்துகிறது.  தற்போது, ​​வருமான வரி கணக்கிட நிதியாண்டு (ஏப்ரல் முதல் மார்ச் வரை) என்ற நடைமுறை பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி வருமானம் மதிப்பிடப்படும் ஆண்டாகும். புதிய மசோதா இந்த குழப்பத்தை நீக்கி ஒரே 'வரி ஆண்டு' கருத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது எந்த தேதியில் நீங்கள் வியாபாரத்தை தொடங்குகிறீர்களோ, அந்த ஆண்டில் இருந்து உங்களுக்கான வரிஆண்டு தொடங்குகிறது என அறிக.

அதேபோன்று தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்புக்கான புதிய வரம்புகளை இந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது. அதன்படி ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற்றால் வரிஇல்லை, 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரை ஊதியம் ஈட்டினால் 5 சதவித வரி, 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தால் 10 சதவித வரி, 12 லட்சம் ரூபாய் முதல் 16 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டினால் 15 சதவித வரி, 16 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20 சதவிதி வரி, 20 லட்சம் முதல் 24 லட்சம் வரை 25 சதவிதி வரி, 24 லட்சத்திற்கு மேல் 30 சதவிதி வரி என விதிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், சம்பளம், வீட்டு சொத்து மூலம் வருமானம், வணிகம் அல்லது தொழிலில் இருந்து கிடைக்கும் வருவாய், மூலதன ஆதாயம், பிற வகைகளிலான வருமானம் ஆகிய 4 வரிஈட்டு அளவுகோல்கள் மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரி அடுக்குகள் அல்லது மூலதன ஆதாய வரி விதிகளில் எவ்வித மாற்றத்தையும் இந்த புதிய மசோதா செய்யவில்லை.
 

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் உயர்வுக்கு பெரியார் தான் காரணம்: இந்தியை எதிர்க்கவில்லை: கொளுத்தி போட்ட தயாநிதி மாறன் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share