தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு... பாவா பக்ருதீனைத் தட்டித்தூக்கிய என்.ஐ.ஏ.!
மன்னார்குடியில் பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.
மன்னார்குடியில் பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டனர். இவருக்குபல்வேறு தீவிரவாத அமைப்புகளில் தொடர்பு இருப்பதாகவும் தடை செய்யப்பட்ட கிலாபாத் , ஹிஸ்புல் தகரினா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாபா பக்ரூதின் தனது சமூக வலைதளங்களில் மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பரப்புரை செய்வதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மன்னார்குடியில் உள்ள பாவா பக்ரூதின் வீட்டில் இன்று காலை என்.ஐ.அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில், அவரை விசாரிப்பதற்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். இதற்கு முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பாவா பக்ரூதின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீகார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா.? 'பீகார் பட்ஜெட்' விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் பதிலடி.!
இதையும் படிங்க: நள்ளிரவில் அதிர்ச்சி... காவல்நிலையத்திற்குள் புகுந்து கைவரிசை... ராணிப்பேட்டையில் பரபரப்பு...!