×
 

இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த ஓபிஎஸ்... ஒரே வார்த்தையை மூன்று முறை அடித்துக்கூறி அதிரடி...! 

இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் அதிமுக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் அதிமுக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து விமான மூலம் கோவையில் வந்த முன்னாள் முதல்வர் 
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்பு 
கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசியவர், “உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை,  இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும், அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

டெபாசிட் இழந்த அதிமுக: 

மேலும் கொங்குநாட்டில்  இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள் என தெரிவித்த அவர், நீண்ட காலம் கட்சிக்காக நானும் செங்கடே்டையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் எனவும், கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர் உன்னதமானவர் செங்கோட்டையன் என தெரிவித்தார்.அதிமுக 
கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது, அதிமுக விசுவாசிகள் அனைவரும் இணைய வேண்டும் என நினைக்கின்றனர் என தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளை  பெற தவறி விட்டார்கள், ஏழு தொகுதிகளில் டெபாசிட் போனது,  13 தொகுதிகளில் மூன்றாவது இடம் போனது, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெறும் 5000 வாக்குகள் மட்டுமே பெற்றது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு கொசு.. கொசுக்களைப் பற்றி பேச வேண்டாம்.. ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்.!

அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற குழுவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற நாங்கள் , தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்றோம். அதை நிரூபிப்பதற்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தும் அதை மீறி 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளை பெற்றோம் என தெரிவித்தார்.
இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் எனக்கூறிய அவர், சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் அவர்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

பேரிடர் நிதி: 

2024ல் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிதி ஒதுக்கியதில் தமிழகம் விடுபட்டு இருப்பது குறித்து கேள்விக்கு, பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது, மத்திய அரசு அந்த அளவுகோலின் படி எந்த மாநிலமாக இருந்தாலும் பாஜக நிதி ஒதுக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் 
தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை இரு மொழிக் கொள்கை என்பதையும் ,  மொழிப்போர் 1965ல் நடந்ததை சொல்லி, அன்று துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் என்பதையும்  சொல்லி இருக்கிறேன் என தெரிவித்த அவர், எங்களது உயிர்மூச்சாக இருக்கின்ற இரு மொழி கொள்கைதான், எங்கள் கொள்கை என்று சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது கருத்தாக இருக்கிறது என தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்த பொழுது என்னையும், எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்து அமித்ஷா பேசினார் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடிக்கு அதிர்ச்சி: 

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ,அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் எனவும் ரிவித்தார்.
செங்கோட்டையனிடம்பேசிக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு ,
எப்படியாவது சண்டை ஏற்படுத்தி செங்கோட்னையன் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் அதுதானே உங்கள் எண்ணம் என தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் இருந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் என மூன்று முறை சொன்ன அவர், அதுதான் ரகசியம் என்று சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார்.
அதிமுக இயக்கம் பிளவு பட்டு இருக்கிறது, தனிப்பட்ட ஈகோவை கீழே போட்டுவிட்டு அம்மா ஆட்சி மலர வேண்டுமென்றால் இணைய வேண்டும் என்று தான் சொல்கிறேன் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share