முடிவெடுப்பதில் ஆளுமை திறன் இல்லாதவர் ஓபிஎஸ்... ஆர். பி.உதயகுமார் விமர்சனம்..!
முடிவெடுப்பதில் ஆளுமை திறன் இல்லாதவர் ஓ. பன்னீர்செல்வம் என ஆர். பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,அதிமுகவில் எந்த பாகுபாடும் கிடையாது என்றும் அனைவரும் சமதர்மமாக இயக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கியதாகவும் ஆனால், ஒட்டுமொத்த தொண்டர்களும் நிர்வாகிகளும் எடப்பாடி பின்னால் நின்றதாகவும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுமை திறன் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பன்னீர்செல்வத்தை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி தொண்டர்களும் காத்திருப்பார்கள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும் சரி தற்போதும் சரி அதற்கு தீர்வு காண்பார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் சொந்த ஊருக்கு விசிட் அடித்த ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை, உதயநிதிக்கு அடித்த ஷாக்...!
ஜெயலலிதா இருக்கும்போது ஒரு வேலையை மற்றவர்களை பார்க்க வைத்து விட்டு தான் வேலை செய்ததாக காட்டிக் கொள்வார் என்று பன்னீர்செல்வத்தின் மீது குற்றம் சாட்டிய ஆர் பி உதயகுமார், ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஒரு மாதம் கூட கட்சி தாங்காது என கூறியவர்கள் முன்பு நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததாக தெரிவித்தார்.
அதிமுக பலவீனமாக உள்ளது என்று திமுக மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசி வருவதாகவும்,18 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக ஆளுநரிடம் சென்றதாகவும், அவர்களை தகுதி நீக்கம் செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், தினகரனை நம்பி சென்ற அந்த 18 எம்எல்ஏக்களும் கடனாளிகளாக ஆகினர் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?