விஜய் கைக்குப் போன முக்கிய ரிப்போர்ட்... தவெகவை ஃபுல் மோடுக்கு ஸ்பீடு ஏத்திய பிரசாந்த் கிஷோர்...!
இரண்டாவது நாளாக பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சந்தித்திருக்கிறார். இன்றைய தினம் என்னென்ன விஷயங்கள் குறித்து பேசப்பட்டது என பார்க்கலாம்.
இரண்டாவது நாளாக பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சந்தித்திருக்கிறார். இன்றைய தினம் என்னென்ன விஷயங்கள் குறித்து பேசப்பட்டது என பார்க்கலாம்.
நேற்று இரண்டரை மணி நேரம் பிரசாந்த் கிஷோர் விஜயைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, பிரசாந்த் கிஷோர் என 4 பேர் விஜயைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சியினுடைய வாக்கு சதவீதம் குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் சமீபத்தில் எதிர்க்கப்பட்ட சர்வேவின் அடிப்படையில தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்தான ஒரு விரிவான ஆலோசனை கூட்டம் தான் நடந்துள்ளது. பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் 4 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரசாந்த் கிஷோர் ஒரு முக்கியமான அறிக்கையை கட்சியினுடைய பொதுச்செயலாளர் ஆனந்திடம் வழங்கி இருக்கிறார். அந்த அறிக்கையில தமிழகத்தில் தற்போதைய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைப்பதற்கான சர்வே முடிவுகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜயின் விறுவிறு வியூகம்… பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு… ஆடிப்போன திமுக- அதிமுக..!
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு எந்தெந்த பகுதிகள்ல அதிக வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது என்பது குறித்தும் அந்த அறிக்கையில குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக எந்த வயதினர் கட்சியில வந்து வாக்களிப்பதற்கு தயாரா இருக்காங்க ஒரு சிலர் வாக்களிக்க தயாரா இருக்காங்க ஆனா இன்னும் எந்தெந்த வயதில் இருக்கக்கூடியவங்க முடிவெடுக்கல என்பது குறித்தும் அந்த அறிக்கையில குறிப்பிட்டிருப்பதாகவும் முக்கியமா தமிழக வெற்றிக் கழகம் அடுத்து வரக்கூடிய 11 மாதங்கள்ல எந்தெந்த மாதிரியான பணிகளை கட்டமைக்கும் பட்சத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வாக்கு செலுத்தலாமா வேண்டாமா அப்படின்ற குழப்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பை எது அதிகரிக்கும் என்பது குறித்தும், தமிழக வெற்றி கழகத்தினுடைய வாக்கு சதவீதம் தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டமாக தான் இன்று ஒரு மூணு மூணு மணி நேரம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த அறிக்கையை தான் தற்போது தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியினுடைய தலைவர் விஜயிடம் தந்துள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய ஆதவ் அர்ஜுனா, கட்சியினுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான்சன் அந்த மூணு பேரும் பிரசாந்த் கிஷோர் இன்று வழங்கிய அந்த அறிக்கயை விஜயிடம் வழங்கி இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னாரு, அது இந்த அறிக்கைகளை வைத்துக்கொண்டு அடுத்த கட்டமா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ்...பிகே-விஜய் சந்திப்பின் பின்னனி என்ன?