பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
பாலியல் நோக்கமின்றி, மைனர் சிறுமியை தொடுதல், உதட்டை கசக்குதல், பிதுக்குதல், பக்கத்தில் உறங்குதல் ஆகியவை போக்ஸோ சட்டத்தின் கீழ் மோசமான பாலியல் தாக்குதலாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12 வயது சிறுமிக்கு அவரின் உறவினர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டி அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரிவு 10, ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆதரவற்ற இந்த சிறுமி அரசு காப்பகத்தில் வளர்ந்து வருகிறார். மாதத்துக்கு 4 நாட்கள் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்து செல்வார். அப்படிவந்து செல்லும் போது, அந்தசிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த சிறுமியின் உதட்டைப் பிதுக்கியதாகவும், தனக்கு அருகே படுத்து ஆட்சேபத்துக்குரிய வகையில் தூங்கியதாகவும் அந்த சிறுமி புகார் அளித்தார்.
இதையடுத்து, அந்த நபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரிவு 10, ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்கய்யா..! பாஜக ஆட்சி வந்ததும் தலைநகரில் அதிரடி மாற்றம்...! பரபரப்பு தகவல்கள்..!
அந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா முன்னிலையில் கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அந்த நபரின் செயல்பாடு அந்த சிறுமியின் மாண்பையும், ஒழுக்கத்தையும் மீறியிருக்கலாம். ஆனால், எந்த பாலியல் நோக்கமின்றி, அவரின் செயல்பாடு என்பது போக்ஸோ சட்டத்தின் 10-வது பிரிவுக்குள் கொண்டுவர முடியாது. ஆனால், ஐபிசி 354 பிரிவின் கீழ் பெண்ணிண் மாண்மைக் குலைக்கும் நோக்கில் தொடுதல் என்பதற்கு முகாந்திரம் இருக்கிறது. ஆதலால், போக்ஸோ சட்டத்தின் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து அந்தநபரை விடுவிக்கிறேன், ஆனால், ஐபிசி 354பிரிவின் கீழ் பதிவு செய்த வழக்கு தொடரும், அதற்கான அனைத்து முகாந்திரங்களும் இதில் அடங்கியுள்ளன.
ஒரு பெண்ணுக்கு மாண்பைக் குலைக்கும் வகையில் அவருக்கு எதிராக கிரிமினல் சக்தியை பயன்படுத்தி அவருக்கு தெரிந்தே தொடுதல் இந்த பிரிவின் கீழ் வரும். ஆனால் புகார் அளித்த சிறுமி, பாலியல் ரீதியாக பாதிக்கப்படவில்லை, எந்தவிதமான வாக்குமூலமும் மாஜிஸ்திரேட், போலீஸார், மகளிர் அல்லது குழந்தைகள் ஆணையத்திடம் வழங்கவில்லை.
போலீஸார் அறிக்கையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் அல்லது அத்தகைய குற்றத்துக்கு அந்த நபர் முயற்சித்தார் என்றோ, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தில் சிறிதளவு கூட இல்லை. ஆதாலல் இது 'பாலியல் நோக்கம்' என்பதையே மறுக்கிறது, போஸ்கோ சட்டத்தின் பிரிவு 10 இன் கீழ் ஒரு குற்றத்தின் இன்றியமையாத அங்கமாக இருக்கும்போது அதற்குள் இது வராது என தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: யமுனை நதியில் 1,300 டன் கழிவு குப்பைகள் அகற்றம்... படகில் சென்று டெல்லி அமைச்சர் ஆய்வு..!