விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி தூத்துக்குடி - சென்னை ஈசியா பறக்கலாம்!!
கொரோனா காலத்தில் சேவையை நிறுத்திய ஒரு தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது சேவையை தூத்துக்குடியில் இருந்து மீண்டும் தொடங்குகிறது.
கொரோனா காலத்தில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. குறிப்பாக விமான போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு விமான சேவைகளும் குறைக்கப்பட்டது. மேலும் சில தனியார் நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்திக்கொண்டன. அவ்வாறு கொரோனா காலத்தில் சேவையை நிறுத்திய ஒரு தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது சேவையை மீண்டும் தொடங்குகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் விமான சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடியில் தொடங்க பல காரணங்கள் இருந்தாலும் தூத்துக்குடி நகரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய துறைமுகம் என்றால் அது தூத்துக்குடி துறைமுகம் தான். மேலும் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டம் மக்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் தான் வர வேண்டும். தற்போது இந்த விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்த காரணங்களால் தூத்துக்குடி விமான நிலையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை அடுத்து அங்கு பெரிய விமானங்கள் தரைஇறங்கும் வகையில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2 நாள் பயணமாக மொரீஷியஸ் சென்றார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!
தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 1350 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட ரன்வே இருக்கிறது. இந்த ரன்வையை 3115 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட ரன்வேயாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 3611 மீட்டர் நீளம் கொண்ட ரயில்வே செயல்பாட்டில் இருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில்வே கொண்ட விமான நிலையமாக விரைவில் தூத்துக்குடி விமான நிலையம் மாறப்போகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 4 சேவைகள் வழங்கி வருகிறது. இதேபோல் பெங்களூருக்கும் விமான சேவை வழங்கி வருகிறது. இந்த விமான சேவை வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்காக விரைவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அலுவலகத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் தூத்துக்குடிக்கு 7.40 மணிக்கு வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.45 மணிக்கு சென்னையை சென்றடையும். மதியம் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் மாலை 3.55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் விமானம் 6.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இதே போல் தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் 9.35 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். பெங்களூருவில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் 11.45 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவை, அந்த நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 14.8 கிலோ தங்கம் கடத்திய வாகா பட நடிகை ரன்யா...! தூக்கி ஜெயிலில் போட்ட போலீஸ்..!