×
 

சும்மா இருந்தால் சுகம் தராது இந்த அரசியல்..! புஸ்ஸியை அனுப்பி ஆழம் பார்த்த விஜய்..!

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை... தவெகவுக்கு இது அனுபவம்... களம் தான் கட்சியை வலுவூட்டும் என்பதை புஸ்ஸி ஆனந்த் இந்நேரம் உணர்ந்திருப்பார்..!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைதுக்கு விஜய் ஆளுநர் ரவியை சந்தித்தது தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

விஜய் இன்று காலை ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘தங்கைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரிதும் வேதனையை ஏற்படுத்துகிறது. யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழ்நிலையிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும்  பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்’’ என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து விஜய், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்தார். அப்போது ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்த அவர் பின்னர் அப்போதும் செய்தியாளர்களை சந்திக்காமல் கிளம்பிச் சென்றார். அதன் பிறகே புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டு இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: விஜயகாந்த் விசுவாசிகள் மீது பாய்ந்த புஸ்ஸி... நன்றி மறந்த விஜய்..! அன்புமணி மகளுக்கு சப்போர்ட்: தந்தையை கைவிட்டதாக ரிப்போர்ட்..!

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை... தவெகவுக்கு இது அனுபவம்... களம் தான் கட்சியை வலுவூட்டும் என்பதை புஸ்ஸி ஆனந்த் இந்நேரம் உணர்ந்திருப்பார்..!

இதையும் படிங்க: 'யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது?' பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share