×
 

பட்ஜெட் 2025: வருமான வரி உச்சவரம்பு குறித்த கேள்விகளும், பதில்களும்

வருமான வரி உச்சவரம்பு

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தனது 8-வது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தரக் குடும்பத்தினருக்கு பெரிய நிம்மதியளிக்கும் வகையில் வருமானவரி உச்சவரம்பு அளவை உயர்த்தி, வருமானவரி விலக்கு அளவையும் உயர்த்தி அறிவித்துள்ளார்.


புதிய வருமானவரி உச்சவரம்பு என்ன
ரூ.4 லட்சம் வரை வரியில்லை
ரூ.4 முதல் 8 லட்சம் வரை- 5 % வரி
ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை - 10% வரி
ரூ.12 முதல் ரூ.16 லட்சம் வரை - 15 % வரி
ரூ.16 முதல் ரூ.20 லட்சம் வரை- 20 % வரி
ரூ.20 முதல் ரூ.24 லட்சம் - 25 % வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் – 30% வரி
புதிய வரிவிதிப்பின் மூலம் மாத ஊதியம் பெறும் ஒருவர் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ8 முதல் ரூ.12 லட்சம்வரை 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ16 லட்சம்வரை 15 சதவீதம் வரியும், ரூ.16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25 சதவீதம் வரியும், ரூ.24  லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கொண்டுவரப்பட்டுள்ளது.


எவ்வாறு வரி விதிப்பு மாறியுள்ளது
கடந்த வரிவிதிப்பில் வரிவிலக்கு அளவு ரூ.3 லட்சமாக இருந்தது தற்போது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வரிவிதிப்பில் 5 சதவீத வரிஎன்பது ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்பட்டது. இது தற்போது ரூ.4 முதல் ரூ.8 லட்சம்வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
முந்தை முறையில் 10 சதவீதம்வருமானவரி ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்பட்டது. இது தற்போது ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு அவர்களுக்கு 10 சதவீத வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
15 சதவீத வரிவிதிப்பில் முன்பு ரூ.12 முதல் 15 லட்சம் ஊதியம் பெறுவோர் இருந்தனர். இது தற்போது ரூ.12 முதல் ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
30 சதவீதம் வரி என்பது முன்பு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்பட்டிருந்தது.இது உடைக்கப்பட்டு, ரூ.16 முதல் ரூ.20 லட்சம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம், ரூ.20 முதல் ரூ.24 லட்சம் வருமானப் பிரிவினருக்கு 25 சதவீதம், ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமான பிரிவினருக்கு 30 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2025: விலை குறையும், உயரும் பொருட்கள் என்ன? 

யார், எப்படி வரி செலுத்தத் தேவையில்லை 
பட்ஜெட் ஆவணங்கள்படி, ஆண்டுக்கு ரூ.12லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு கழிவுகள் வழங்குகிறது, அதன்படி நிரந்தரக் கழிவு ரூ.75ஆயிரம் சேர்த்து,ரூ.12.75லட்சம்வரை விலக்கு உண்டு. ரூ8லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு கழிவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 லட்சம் வருமானப் பிரிவினருக்கு ரூ.80 ஆயிரம் வரை கழிவு உண்டு
ரூ.16 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டினால் வரி எவ்வாறு கணக்கிடுவது
ஒருவர் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் வருமானம் ஈட்டினால் ரூ4 லட்சம்வரை வரியில்லை. ரூ.4 முதல் 8 லட்சம் வரை 5 சதவீதம்(ரூ.20000), ரூ.8 முதல் ரூ12 லட்சம் வரை 10சதவீதம்(ரூ.40000), ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15 சதவீதம்(ரூ.60ஆயிரம்), ஒட்டுமொத்தமாக ரூ.1,20,000 வரி செலுத்த வேண்டும். தற்போது பழைய விரிவிதிப்பில் செலுத்தும் அளவில் இருந்து ரூ50ஆயிரம் குறைவாகும்.
பழைய வரிவிதிப்பு முறையைப் பின்பற்றலாமா
ஒவ்வொருவரின் நிதிச்சூழல், நிலைமையைப் பொருத்து அவர் பழைய வரிவிதிப்பு முறை, புதிய முறையைத் தொடரலாம். உதாரணமாக, ரூ.16 லட்சம் வருமானம் ஈட்டுவோர் ரூ.4 லட்சம் வரை வரிவிலக்கு, ரூ.12 லட்சத்துக்கு மட்டும்தான் வரி. ஆனால், பழைய வரிவிதிப்பு முறையில், ரூ.16 லட்சம் வருமானத்துக்கு ரூ.1,77,500 வரியாக செலுத்த வேண்டும், அதாவது ரூ.57ஆயிரம் கூடுதலாக செலுத்த வேண்டும்

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் "புடவைகளின் ரகசியம்" என்ன? ருசிகர தகவல்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share