இது அபசகுணமாச்சே... 5 அமைச்சர்களை காவு வாங்கிய அரசு பங்களா... குடியேற மறுக்கும் அழுகினி அமைச்சர்..!
சகுணம் பார்ப்பதில் அரசியல்வாதிகளை அடித்துக் கொள்ளவே முடியாது. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கூட சகுணம் பார்த்துத்தான் வீட்டை விட்டே வெளியே கிளம்பிச்செல்கிறார்கள்.
சகுணம் பார்ப்பதில் அரசியல்வாதிகளை அடித்துக் கொள்ளவே முடியாது. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கூட சகுணம் பார்த்துத்தான் வீட்டை விட்டே வெளியே கிளம்பிச்செல்கிறார்கள். அப்படித்தான் மகாராஷ்டிர அரசியலில் அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சகுணம் பார்ப்பதால் அவர் ஏற்க மறுப்பதாக இப்போது ஒரே சலசலப்பு.
மும்பையின் அமைச்சர் சந்திரசேகர் பவான்குலேவுக்கு ஒதுக்கப்பட்ட அரசின் ஆடம்பர பங்களாவை அவர் ஏற்க மறுத்துள்ளார். முன்பு 5 அமைச்சர்களுக்கு அசுபமாக இருந்ததால் அந்த பங்களாவுக்கு செல்ல மறுக்கிறார் பவான்குலே.
தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையின் கீழ் துறைகள் ஒதுக்கப்பட்ட பிறகு அனைத்து அமைச்சர்களுக்கும் பங்களாக்களை ஒதுக்கியுள்ளார். இந்த நிலையில் அரசு பங்களாவான ராம்டெக் பங்களா மீண்டும் மும்பையின் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பங்களாவை மூத்த அமைச்சர் சந்திரசேகர் பவான்குலேவுக்கு வழங்கியுள்ளது அவரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.
இந்த பங்களாவை எடுத்துக் கொள்ள பவான்குலே துளியும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக உள்ள பவன்குலே, மகாராஷ்டிர பாஜகவின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.
இதையும் படிங்க: அதே இடம்... அதே சுவரு... டைம் இல்ல தலீவா..! விஜயின் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியலால் அலறல்..!
மல்பார் மலை மும்பையின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்று. மும்பையின் ராணி என்றும் இது அழைக்கப்படுகிறது. மலபார் ஹில்ஸ் சினிமா நட்சத்திரங்கள், நாட்டின் பெரும் தொழிலதிபர்கள் வசிக்கும் சொர்க்க பூமி. எஸ்.பி.ஐ வங்கியின் தலைவரின் வீடும் இங்குதான் அமைந்துள்ளது. மாநில ஆளுநருக்கும் இங்கு வீடும் கட்டப்பட்டுள்ளது.
ராம்டெக் பங்களாவும் மலபார் ஹில்ஸில்தான் இருக்கிறது. இந்த பங்களா கடந்த 2010ம் ஆண்டு ரூ.43 லட்சம் செலவில் அலங்கரிக்கப்பட்டது. 8,857 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களா தான் இப்போது மஹாராஷ்டிர அரசியலி ஹாட் டாபிக்.
சந்திரசேகர் பவான்குலே ஏன் இந்த பங்களாவை ஏற்க மறுக்கிறார்? இதுவரை இந்த பங்களாவில் இருந்த அத்தனை தலைவர்களின் பதவிகளும் ஆட்டம் கண்டுள்ளன. இந்த லிஸிடில் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல் தீபக் கேசர்கர் வரை படாதபாடு பட்டுள்ளனர்.
1993-ல் சரத் பவார் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார். லத்தூர் எம்எல்ஏ விலாஸ்ராவ் தேஷ்முக்கும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். தேஷ்முக்கிற்கு வருவாய் மற்றும் மருத்துவக் கல்வி போன்ற முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முக்கிய துறை ஒதுக்கப்பட்டதால் அவருக்கு ராம்டெக் பங்களா ஒதுக்கப்பட்டது. அவரும் அதில் வாழப் போனார். ஆனால் 1995ல் அவருக்கு கெட்ட காலம் ஆரம்பித்தது. 1995 ல், தேஷ்முக் தனது மிகப் பெரிய மதிப்பலான சொந்த இடத்தை இழந்தார். அதே ஆண்டு சரத் பவாரின் அரசும் இல்லாமல் போனது.
ராம்டெக் பங்களா கோபிநாத் முண்டேவுக்கு 1995ல் ஒதுக்கப்பட்டது. முண்டே அரசில் துணை முதல்வராக இருந்தார் கோபிநாத் முண்டே. துணை முதல்வரின் பங்களா என்பதால் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்தது. ஆனால் 1999ல் பாஜக-சிவசேனா அரசு ஆட்சிக்கு வந்தது. இதற்குப் பிறகு முண்டேவும் அரசியலில் அடி சறுக்கினார். 1999க்குப் பிறகு, வெகுகாலம் கழித்தே 2014ல் மத்திய அமைச்சராகப் பதவி பெற்றார்.
1999ல், விலர்சாவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டே அரசாங்கத்தில் சகன் புஜ்பால் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். ராம்டெக் பங்களா புஜ்பாலுக்கு ஒதுக்கப்பட்டது. 2003ல் தெல்கி வழக்கில் புஜ்பால் சிக்கினார். அவர் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
2010ல், புஜ்பால் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு அமைச்சராகத் திரும்பினார். இந்த முறையும் அவருக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால் 2014ல் காங்கிரஸ்-என்சிபி அரசு ஆட்சிக்கு வந்தது. புஜ்பால் மீது அமலாக்கத்துறை ரெய்டு இறுகியது. அதனால் அவர் சிறைக்கு செல்ல நேர்ந்தது.
இந்த பங்களா 2014ல் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியின் போது ஏக்நாத் காட்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. காட்சே அரசாங்கத்தில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக இருந்தார். கட்சே மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது சில நாட்கள் மட்டுமே இந்த பங்களாவில் தங்கியிருந்தார். 2019ல் காட்சேவுக்கு சீட்டே வழங்கப்படவில்லை.
இதே பங்களா உத்தவ் தாக்கரேயின் அரசில் சாகன் புஜ்பாலுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த அரசு 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இதற்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே அரசில் தீபக் கேசர்கருக்கு ராம்தேக் பங்களா வழங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், உத்தவ் சிவசேனாவிற்கு அவர் சென்றதால் கேசர்கர் ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இதனால்தான் பவான்குலே இந்த பங்களாவை வெறுக்கிறார். இப்போது இந்த பங்களாவை அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு மாற்றிக் கொள்ள விரும்புவதாக பேச்சு அடிபடுகிறது. எல்லாம் சரியாக நடந்தால் முண்டேக்கு இந்த பங்களாவை ஒதுக்கலாம். இந்த பங்களாவில் பங்கஜாவின் தந்தை கோபிநாத் முண்டேவும் வசித்து வந்துள்ளார்.
பங்கஜா முண்டே சட்ட மேலவை உறுப்பினர். இவர் ஓபிசி, பெண்கள் ஒதுக்கீட்டில் இருந்து ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். பங்கஜா சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலத்துறையை வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியாவின் இணையற்ற அரசியல் மதியூகி... கடைசி வரை சிறந்த மனைவியைத் தேடிக் கொண்டிருந்த வாஜ்பாய்..!