×
 

யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன்..! தங்கக் கடத்தலில் கைதான நடிகை வாக்குமூலம்..!

யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டேன் என தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் கர்நாடக காவலர் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள்.

கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளார்.இவரை, விமான நிலையத்தில், டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையும் படிங்க: என்னை மிரட்டுறாங்க சார்... நீதிபதி முன் கதறி அழுத நடிகை.. தங்க கடத்தலில் சிக்கும் அரசியல்வாதிகள்.?

இவர், தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தியது விசாரணையில் அம்பலமானது. தான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டது குறித்தும், தங்கத்தை கடத்தியது குறித்தும், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் ரன்யா ராவ் விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டு வாரங்களாக தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும், துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து பெங்களூருவில் டெலிவரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

 துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்றும் இதற்கு முன்பு நான் துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததோ வாங்கியதோ இல்லை எனவும் யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்துள்ளார் 

விமான நிலையத்தில் இருந்து பேண்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல்களை வாங்கி, விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் தங்கக் கட்டிகளை தனது உடலில் மறைத்து வைத்ததாகவும் தங்கம் இரண்டு பிளாஸ்டிக் மூடிய பாக்கெட்டுகளில் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

 

 

இதையும் படிங்க: நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தலில் அமைச்சர் தொடர்பு..? டி.கே.சிவகுமார் சொல்வதென்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share