×
 

இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் - ஆளுநர் ரவி

இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைத்தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பதிவில்,தென் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியதாக கூறியுள்ளார்.

 இந்த பகுதி மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருவதாக கூறியுள்ளார். தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக மக்கள் உணர்கிறார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு...!

மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள் என கூறியுள்ள ஆளுநர், மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருமொழிக் கொள்கையால் அண்டை மாநிலங்களை விட தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான பிரச்சனை முடித்து வரும் நிலையில் மும்மொழி கொள்கை என்பது தமிழகத்திற்கு மிக அவசியம் என ஆளுநர் ரவி கூறியிருப்பது மீண்டும் பேசுப் பொருளாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: தனித்து இயங்கும் தமிழ்மொழி.. ஒன்றிய ஆட்சியாளர்கள் கண்ணை உறுத்துகிறது... முதலமைச்சர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share