×
 

தேர்தல் ஆணையர் நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்.. பிப்.12ம் தேதி விசாரணை!

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 12ம் தேதி விசாரிக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பிப்ரவரி 12ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் ஓய்வு பெறும் அன்று இந்த மனு விசாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரிக்கப்பட்டது. மனுதாரரான ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த கூறுகையில் “இந்த வழக்கு பிப்ரவரி 4ம் தேதி கடைசியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதை விசாரிக்க கூடுதல் நேரம் தேவை என்பதால், வரும் 12ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “ தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இடைக்காலத் தடைவிதிக்கக்கூடாது” எனத் தெரிவித்தார். இந்த சட்டம் கடந்த 2024, மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டபோது, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது, தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சாந்து, ஞானேஷ் குமார் ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கவும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தள்ளுபடி; "உயர் நீதிமன்றத்தை நாடும்படி" உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “  தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும்” என தெரிவித்தது. ஆனால்,  மத்திய அரசு இந்தத் தேர்வுக் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்த மாதம் இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டபோது “ வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் கருத்துக்கு அதிகாரமிருக்கிறதா அல்லது சட்டம் இயற்றுவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான வழக்கு” எ னத் தெரிவத்தார்

இதையும் படிங்க: 200 இந்தியர்களை நாடு கடத்தியது டிரம்ப் அரசு..! இந்தியா புறப்பட்டது அமெரிக்க ராணுவ விமானம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share