சீமான் தம்பிகளால் ஸ்தம்பித்த வளசரவாக்கம்... காவல்நிலையம் முன்பு மாபெரும் போராட்டம்...!
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த அந்த பாலியல் வழக்கில் இன்று இரவு 8:00 மணிக்கு வளரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக இருக்கிறார். இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்த சீமான் தற்பொழுது வடழனியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தஆலோசனைக்கு பிறகு இரவு அதாவது சரியாக எட்டு மணிக்கு இந்த வலசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி காவல்துறையினுடன் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க இருக்கிறார். இதனிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு முன்பாக கூடி பெரும் அந்த ஆர்ப்பாட்டத்திலோ போராட்டத்திலோ ஈடுபடக்கூடாது என்பதற்காக காவல்நிலையத்திற்கு முன்பு உள்ள ராமானுஜிபுரம் சாலை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்நிலையத்திற்கு செல்லும் வழிகளையும் ஃபேரிகார்டு போட்டு தடுத்துள்ளனர். உள்ளே பெண்கள் சென்றால் கூட முழுவதுமாக விசாரித்துவிட்டே அனுமதித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர் யாரேனும் இருந்தால் அவரை விசாரித்து அந்த தெருவிலிருந்து முழுமையாக வெளியேற்றுகிறார்கள்.
இதையும் படிங்க: கைது பயத்தில் சீமான்... சென்னையில் கால் வைத்த மறுகணமே பதறியடித்துக் கொண்டு செய்த செயல்...!
இதனிடையே இந்த சாலைக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் கட்சியின் தலைவர் நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன், ஆஜராகிறேன் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள். இந்த தெரு முழுக்க ஏன் இவ்வளவு பேரிகார்டுகள் போட்டு காவல்துறையின் மூலம் முடக்கி இருக்கிறீர்கள்?. பாதுகாப்பை எல்லாம் உடனே விலக்க வேண்டும். மக்கள் உள்ளே செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏன் இவ்வளவு ஒரு கட்டுப்பாடுகளை விதிக்கிறீர்கள் என்று நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அது மட்டுமல்லாமல் பெண் தொண்டர்கள் அதிக அளவில் இங்கு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சீமானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள், போலீஸ் ஒழிக என்றும் முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது நாதகவினர் இடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக ஆஜரக வரும் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருக்கிறதோ? என்ற அச்சம் நாதகவினர் இடையே நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அந்தப் பெண்ணோடு அரைமணி உட்கார்ந்தால் எல்லாம் முடிந்துவிடும்- சிணுங்கும் சீமான்