இப்படி பொய் பேசுறதுக்கு வெட்கப்படனும் அமைச்சரே- செல்வப் பெருந்தகை!!!
கும்பமேளாவிற்கு மக்கள் நிம்மதியாக சென்று வந்தனர் எனக் கூறுவதற்கு ரயில்வே இணையமைச்சர் வெட்கப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
மகா கும்பமேளாவிற்கு மக்கள் நிம்மதியாக ரயிலில் சென்று வந்தனர் என பொய் பேசுவதற்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள செல்வப்பெருத்தகை,மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்ததாக ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் சோமன்னா கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என சாடியுள்ள செல்வப்பெருந்தகை, கும்பமேளாவிற்கு சென்ற மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தவை நம்மால் பார்க்க முடிந்தது என்று கூறினார். மேலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயிலை மக்கள் அடித்து உடைத்ததை சமூக வலைதளங்களில் அனைவரும் பார்க்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையின் தலைவர் பதவிக்கு ஆபத்து..? காங்கிரஸில் போர்கொடி தூக்கும் 25 மாவட்ட தலைவர்கள்..!
தொலைதூர ரயில் பயணத்திற்கு பேருதவியாக இருந்த பொதுப்பெட்டிகளை குறைத்து மக்களை ரயில்வே அமைச்சகம் கலக்கத்த்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும், இவ்வாறாக இருக்கும்போது மக்கள் சிரமத்தை சந்திக்கவில்லை என அமைச்சர் பொய் பேசுவது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சொல்லுங்க.. செல்வபெருந்தகைக்கு கடிதம் எழுதிய அன்புமணி.!