×
 

#BREAKING விஜயலட்சுமி வழக்கில் ஓய்ந்தது தொல்லை... சீமான் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2011ம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தன்னை ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கத்தில் நடிகை ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376 ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை, 2012 ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சீமான் அளித்த மனு மீதான வழக்கு இம்மாதம் 17ம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் அவர், ‘விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது.’ என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு செய்திருந்தார். நடிகை அளித்த பாலியல் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், முன்னதாக  தடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் இருந்தது, அதன் பின்னர் இருவரும் பிரிந்தோம். ஏற்கனவே நனக கு எதிராக இதுபோன்று புகார் கொடுத்து விட்டு வழக்கை திரும்ப பெற்றார்.

தற்போது மீண்டும் புகார் அளிக்கிறார், இது வேண்டுமென்றே செய்வதாக உள்ளது. இதற்கு முன்னர் 3 முறை வழக்கை திரும்ப பெற்றுளளார்.  புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காரணமாக இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பு மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரே , அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என கருத்து  தெரிவித்த நீதிபதிகள், இருதரப்புக்கும் இடையே செட்டில்மெண்ட் அடிப்படையில் முடிவு எட்டப்படுமா என பார்க்க வேண்டும், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இதுதொடர்பாக எதிர்தரப்பு மனு தாரருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. 

தொடர்ந்து, 12 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மே மாதத்திற்கு ஒத்திவைத்தார். 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share