×
 

சொந்த ஊரில் விலை போகாத ஆடு ! அமைச்சர் செந்தில் பாலாஜி கலாய்.

சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் விலை போகாத ஆடு, வெளியூரில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் இங்கு வந்தார் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி உள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெரியார் கருத்துக்களை இன்றைய தலைமுறையினருக்கு பரப்பும் வகையில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

கோவை பாஜகவினருக்கு சொந்தம் என்பதைப் போல ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்து வருவதாகவும், ஆனால் கோவை திராவிட மண் பெரியார் மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிஜேபி சிஎம் கூட கெத்தா உட்கார்ந்த செந்தில் பாலாஜி..! மின்சார மாநாட்டில் பங்கேற்பு...!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு வெற்றி பெற்று விட்டதால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என பாஜகவினர் நினைப்பதாகவும், சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் விலை போகாத ஆடு வெளியூரில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கனவில் வந்தார் என விமர்சித்தார். 

இந்த ஊரும் பெரியார் மண் தான், அவர்களுக்கு எங்கேயும் வேலையில்லை என்பதை உணர்த்தி அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டும் செருப்பு போட மாட்டேன் என்றும் கூறிவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடைசிவரை செருப்பே போட முடியாது என்று அண்ணாமலையை அமைக்க செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். எனவே மாநில தலைவர் என்ற பதவியோடு இருப்பது தான் அவருக்கு நல்லது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் புதிய திருப்பம்... கறார் காட்டிய நீதிமன்றம்.. காவல்துறைக்கு உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share