சிங்கப்பூர் சென்றாலும் இப்படியா? கணவருடன் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு 7 மாதம் ஜெயில்..!
சிங்கப்பூரில் பக்கத்து வீட்டு படுக்கை அறையில், கணவருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்கள் அங்கு போயும் தங்கள் வழக்கமான சில்மிஷங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ளும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிங்கப்பூரில் சிக்கிய அந்த இந்தியரின் பெயர், எரக்கோடன் அபின்ராஜ். வயது 26. சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் பால்கனி வழியாக அபின்ராஜ் பக்கத்தில் வீட்டில் நுழைந்தார். அந்த வீட்டின் படுக்கை அறையில் சுமார் 36 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள் மகள் தனியாக மற்றொரு அறையில் இருந்தார். பக்கத்தில் கணவர் படுத்திருப்பதை பொருட்படுத்தாமல் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு பாலியல் சேட்டையில் அந்த வாலிபன் ஈடுபட்டிருக்கிறார். யாரோ தொடுவதை அறிந்து அந்த பெண் திடுக்கிட்டு விழித்து எழுந்தார்.
டார்ச் லைட்டால் அந்தப் பெண் அபின்ராஜை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டார். பெண்ணின் சத்தத்தை கேட்ட அருகே படுத்திருந்த கணவரும் எழுந்து விட்டார். பக்கத்து வீட்டுக்காரர் அபின்ராஜைப் பார்த்ததும் அவர் அறையை விட்டு வெளியேறும்படி அபின் ராஜ் இடம் ஆத்திரத்துடன் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: மரண தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்த நீதிபதி - மேல்முறையீட்டு மனுவால் தப்பித்த இந்திய வம்சாவளி நபர்..!
இதில் பயந்து போன அபின்ராஜ் அந்த அறையிலேயே.. சிறுநீர் கழித்து விட்டார். மேலும் தயவுசெய்து போலீசில் புகார் செய்து விட வேண்டாம் என கணவன்- மனைவியிடம் அவர் கெஞ்சி கூத்தாடி இருக்கிறார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பக்கத்து வீட்டு பெண் போலீசுக்கு போன் செய்து அழைத்தார். போலீசார் வந்ததும் அத்துமீறி நடந்து கொண்டதை அந்த வாலிபர் ஒப்புக்கொண்டாலும், அந்த பெண்ணை நான் தொடவில்லை எனது மொபைல் போன் அவர் மீது விழுந்து விட்டதால் தான் அவர் விழித்துக் கொண்டார் என்று சமாளித்து இருக்கிறார்.
3 ஆண்டு ஜெயில் - சவுக்கடி தண்டனையில் இருந்து தப்பினார்!
போலீசார் இது குறித்து அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.. இந்த வழக்கில் நீதிமன்றம் அபின்ராஜுக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த பாலியல் மானபங்க வழக்குக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் மற்றும் சவுக்கடியும் தண்டனையும் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
ஆனால் அபின்ராஜன் வழக்கறிஞர் அம்பலவாணர் ரவிதாஸ் தனது கட்சிக்காரர் இந்தியாவில் வரும் வேலை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி ஏழு மாத சிறைத் தண்டனை மட்டும் மிதிக்கும் படி கோரிக்கை வைத்து இருந்தார். அதை ஏற்று 7 மாத சிறை தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பார்லிமென்டில் பச்சை பொய்..! இந்திய வம்சாவளி எம்.பிக்கு ரூ.9 லட்சம் அபராதம்..!