எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?
சென்னை சென்ட்ரல் பகுதியில் சொந்தத் தந்தையே இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன், ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சங்கர்லால். இவர் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ஏழு கிணறு பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் ரோகித். வயது 18. அப்பாவுடன் துணைக்கு தங்கி உள்ளான். சங்கர்லால் அப்பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். ரோஹித் அப்பாவுடன் துணைக்கு இருந்து வருகிறான். இவர்களது குடும்பம் ராஜஸ்தானில் தான் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு இருமுறை என ராஜஸ்தான் சென்று குடும்பத்தினருடன் சில காலம் செலவிடுவார். பின்னர் மீண்டும் சென்னை திரும்பி தொழிலை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தந்தை சர்கர்லாலுக்கும், மகன் ரோகித்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடையில் இருவரும் மாறி மாறி திட்டிக் கொண்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ரோகித், அருகில் இருந்த இரும்பு கம்பியால் சங்கர்லாலை தாக்கி உள்ளான். இதில் படுகாய்ம் அடைந்த சங்கர்லால் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி சரிந்துள்ளார். பதற்றமடைந்த ரோகித், அங்கிருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கர்லாலை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: காலாவதியான பொருட்கள் விற்பனை..? ஆல்பர்ட் தியேட்டரில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு..
இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சங்கர்லாலை சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திலேயே சங்கர்லால் இறந்திருக்கலாம் என்றும் கூறினர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ரோகித்தை தேடி உள்ளனர். அவனது செல்போன் சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகே காண்பித்ததை அடுத்து, ரயில்வே போலீசார் உதவியை நாடி உள்ளனர். ரயில்வே போலீசார், செண்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி ரோஹித்தை கைது செய்தனர்.
ரோஹித்திடம் போலீசார் விசாரிக்கையில், கடந்த முறை சொந்த ஊருக்கு சென்று வந்த போது சங்கர்லால் தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியும் திட்டியதாகவும் ரோகித் தெரிவித்துள்ளான். இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் சங்கர்லாலை இரும்பு ராடால் தாக்கியதாகவும் அவர் இறந்தது தெரிந்ததும் போலீசிடம் சிக்கி கொள்வோம் என பயந்து தப்ப முயன்றதாகவும் ரோகித் தெரிவித்துள்ளான். ஆத்திரத்தில் தானே தனது தந்தையை கொலை செய்து விட்டதாகவும் ரோஹித் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்..