×
 

சசிகலாவுக்காக ஒட்டப்பட்ட திடீர் போஸ்டர்கள்… கலகலத்துப்போன எடப்பாடி பழனிசாமி அணி..!

விரகனூர் ரிங் ரோடு, தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரோடு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் "அதிமுக தலைமையே " என்று சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட  போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுகவின் கட்சி, மற்றும் கொடி உள்பட எதற்கும் உரிமை கோரக்கூடாது என தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் எச்சரிக்கப்பட்ட பின்னும்  சசிகலா ஆதவாளர்களால் "அதிமுகவின் தலைமையே " என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரை,உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், திமுக முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை வரவேற்று அதிமுக சசிகலா ஆதரவு தொண்டர்கள் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ் அதிமுகவில் இணைப்பா..? அடித்துச் சொன்ன இபிஎஸ்..!

அந்த போஸ்டரில், தலைமைக்கு தகுதியே எறென்றும் எங்கள் அதிமுகவின் தலைவியே..'' என்றும், திசை தெரியாமல் செல்லும் (அதிமுக) கப்பலை தலைமை ஏற்க வருக என்பது போன்ற பரபரப்பு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது. 

மதுரை விமான நிலையம் ,பெருங்குடி, மண்டேலா நகர், ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரிங் ரோடு, தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சமீப காலமாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கோகுல இந்திரா போன்றவர்களின் பரபரப்பு சர்ச்சையில் தற்போது வி.கே.சசிகலாவை வரவேற்று ஒட்டிய போஸ்டர்கள் மீண்டும் அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க: பெண் எம்.எல்.ஏ., சென்டிமெண்ட்- அதிமுக இனி, வாழ்நாள் முழுவது எதிர்கட்சிதான்… சிண்டு முடியும் சீனியர்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share