×
 

அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்... திமுகவை அதிர வைத்த அண்ணாமலை.!

தமிழக பாஜக பதவியிலிருந்து செல்லும் முன் அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக சார்​பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்டம் சென்னை திரு​வான்​மியூரில் நடைபெற்​றது. இக்கூட்​டத்​தில் மாநில தலைவர்  அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், "மத்திய பட்ஜெட்டை எதிர்த்து திருவள்ளூரில் முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடத்தினார். தன் பட்ஜெட்டைப் பற்றி எதுவும் பேசாமல் மத்திய பட்ஜெட்டை குறை சொல்லி முதல்வர் பேசியதிலிருந்தே இது சிறப்பான பட்ஜெட் என்பதை உணர்ந்துகொண்டேன்.ம த்திய பட்ஜெட்​டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் தமிழகத்​தில் குறைந்​தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைய போகின்​றனர்.


தாய்​மொழி​யில் தமிழக மாணவர்கள் பின்​தங்கி இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழ் மொழியை சொல்லி அரசியல் செய்​யும் திமுக இதற்காக வெட்​கப்பட வேண்​டும். இந்தியா​வில் அனைத்து இடங்​களி​லும் தமிழை கொண்டு செல்ல வேண்​டும் என்றால், அனைத்து மாநிலங்​களி​லும் தமிழ் பல்கலைக்​கழகம் தொடங்க வேண்​டும். தமிழக அரசு அதற்கான முயற்​சியை செய்​தால், நிதியை மத்திய அரசிடம் பாஜக பெற்று தரும். ஒருங்​கிணைந்த பள்ளிக்​கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டா​லின் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுகிறார். தமிழகத்தில் 2026-ல் 35 ஊழல் அமைச்​சர்​களும் சிறைக்கு செல்வார்கள்.

தமிழகத்​தில் 2026-ல் பாஜக நிச்​சயம் வெற்றி பெறும். முன்னாள் தலைவர் தமிழிசை தலைமை​யில் ஒரு குழு அமைக்​கப்பட உள்ளது. அந்தக் குழு இந்தியா முழு​வதும் பாஜக ஆட்சி​யில் இருக்கும் மாநிலங்​களுக்கு சென்று, முதல்​வர்களைச் சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் நலத்​திட்​டங்களை பார்த்து​விட்டு, 2026 பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய இருக்கிறார்கள்.  மகாராஷ்டிரா​வில் தற்போது தமிழகத்​தைவிட அதிகமாக மகளிர் உரிமை தொகை வழங்​கப்​படு​கிறது. டெல்​லி​யிலும் ரூ.2,500 அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.


2026-ல் தமிழகத்​தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பாஜக ஆளும் மற்ற மாநிலங்கள் எல்லா​வற்​றை​யும்​விட, மாதம்​தோறும் பெண்​களுக்கு வழங்​கப்​படும் உதவி தொகையைவிட  அதிகமாக தமிழகத்தில் வழங்கப்படும்.
திமுகவில் துண்டு போட்டு ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் கட்சித் தலைவராக முடியும். பாஜகவில் அப்படி முடியாது. நான் தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தப் பதவியிலிருந்து செல்லும் முன்பு அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்" என்று அண்ணாமலை பேசினார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி..? வைகோ சொன்ன பளிச் பதில்..!

இதையும் படிங்க: தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது... திமுக கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share