தைப்பூச திருவிழா 2025... பழனியில் விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்...!
பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற பழனியில் விமரிசையாக நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், தைப்பூச தினமான இன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
தைப்பூச விழாவில் பங்கேற்க சில தினங்களாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். 4 கிமீ சுற்றளவு கொண்ட மலைப்பாதையை கிரிவலம் வந்து, மலை மீதுள்ள தண்டபாணி சாமியை தரிசனம் செய்கின்றனர். காவடி எடுத்து ஆடி வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற நேர்த்திகடன் செலுத்தினர். கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதையும் படிங்க: பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... இந்த ஒரு நாள் மட்டும் வெளியானது முக்கிய அறிவிப்பு!
முன்னதாக, அதிகாலையில், பழனி கிரிவலப்பாதையில் காத்திருந்த பக்தர்கள், சூரிய உதயத்தை தரிசனம் செய்தனர். செந்நிறத்தில் வானில் கதிரோன் தோன்றியதும், அரோகரா என முழக்கமிட்ட பக்தர்கள் கற்பூரம் ஏற்றி சூரிய பகவானை பிரார்த்தித்தனர். அப்போது, பக்தர் ஒருவர் பரவசத்துடன் தன்னிலை மறந்து பரவசத்துடன் மனமுருகி வழிபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தைப்பூச தினத்தில் சூரிய உதயத்தை தரிசனம் செய்வது மிக சிறப்பான நிகழ்வு என பக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாலையில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்.. ஹெச். ராஜா அதிரடி கணிப்பு