சீமானின் இமேஜை டேமேஜ் ஆக்கும் அந்த ஒற்றைப் போஸ்டர்... திணறடிக்கும் தி.க குரூப்..!
ஆக மொத்தம் 188 இன்னும் ஒரு 12 வழக்கு பதிவு செய்தால் 200 ஆகிடும். வழக்கு இல்லையென்றால் விடியாது கிழக்கு
பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அவரது கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் புகைப்படத்தை வைத்து ‘‘சினிமா நடிகையை சீரழித்து ஏமு முறை கருக்கலைப்பு செய்த சீமானே... தரம் தாழ்ந்த அரசியல் செய்யாதே... தமிழ்நாடு உன்னை மன்னிக்காது’’ என திராவிடர் பெரியார் கழகத்தினர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர்.
ஆனாலும் அடங்காத நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ‘‘ஏற்கனவே 128 . இப்போ ஒரு 60 பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள். ஆக மொத்தம் 188 இன்னும் ஒரு 12 வழக்கு பதிவு செய்தால் 200 ஆகிடும். வழக்கு இல்லையென்றால் விடியாது கிழக்கு’’ என டெம்ப்ட் ஏற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!
‘‘பகுத்தறிவு பற்றி பைத்தியக்காரன் பேசக்கூடாது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திராவிடர் கழக தலைவர் கிவீரமணி பதிலடி கொடுத்து இருந்தார்.
அதற்கும் பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியினர், ‘‘சொந்த புத்தி தேவையில்லை பெரியார் தந்த புத்தி போதும் என்று சொன்ன ஆகச்சிறந்த பகுத்தறிவுவாதி ஆயிற்றே ஐயா கி.வீரமணி அவர்களே... ’’ எனத் தெரிவித்துள்ளனர். ஆக மொத்தத்தில் பெரியார் பற்றிய சர்ச்சை பேச்சு விவகாரம் இப்போது முடியாது போல் தெரிகிறது.
இதையும் படிங்க: சீமான் மீது பாய்ந்தது 60 வழக்குகள்...ஆடிப் போய் உள்ள நா.த.க!