வெட்கக்கேடானது..! தீயசக்தி திமுக எங்களை 2026ல் தெரிந்து கொள்ளும்... எடப்பாடியார் ஆவேசம்..!
தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும். இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம். 2026ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்
ஒருபுறம் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனை மூலமும், மறுபுறம் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அ.தி.மு.க-விற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘‘இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்’’ என அதிமுக., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனை குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழக்தில் நடக்கும் தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை.
நாடறிந்த ஊழல் திலகங்களான இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்னைகளையும், அதனை சரி செய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசை திருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.
இதையும் படிங்க: அப்பா வேஷம் போடும் திமுகவினர்... 2026இல் அம்மா ஆட்சிதான்.. ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா சூளுரை.!
அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் அதிமுக, எம்.எல்.ஏ., மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள அம்மன் அர்ஜூனன் திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது. தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும். இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம். 2026ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!’’ என அவர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6.30 மணி முதல் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் அவரது இல்லத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாலை 6.30 மணி அளவில் இருந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை, செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனனின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.
2016-2022 சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து ,762 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாகவும், (வருமானத்துக்கு அதிகமாக 71.19தவிகிதம்) அசையும் மற்றும் அசையா வாங்கப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து இருக்கின்றனர்.
அதனடிப்படையில் இந்த சோதனை இன்று காலை 6.30 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!