'ஸ்டாலினா..? ம்ஹூம்... விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல் தெரிகிறது' - செல்லூர் ராஜூ கிண்டல்
அதிமுக சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. முடக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தது.
"சாட்டை சுழற்றி நடவடிக்கை எடுப்பதாக சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் நசாட்டையை சுழற்றுவதாக தெரியவில்லை தவெக தலைவர் விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது''என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலடித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக தலைவர் விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது. அதிமுக சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. முடக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தது.
இதையும் படிங்க: பள்ளிக் கல்வி திட்டத்தில் மூன்று மாநிலங்களுக்கு நோ பண்ட்.. பாஜக அரசை அம்பலப்படுத்திய அன்பில் மகேஸ்
அதிமுக இரண்டு அணியாக, நிர்வாகங்களாக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பிரிந்து சென்ற நேரத்தில் இருவரும் மனு கொடுத்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்புகளே இல்லை. அதனை எடப்பாடியார் பார்த்துக் கொள்வார். 2026 புரட்சித்தலைவர்- புரட்சித் தலைவி ஆட்சியை கொண்டுவரப்போகிறார். அவருடைய செல்வாக்குக் கூடிக்கொண்டு இருக்கிறது.
அந்த செல்வாக்கை மறைப்பதற்கு ஆளும் கட்சி சதி செய்கிறது.எங்கள் அண்ணன் செங்கோட்டையன் காவல்துறையில் பாதுகாப்பு கேட்டாரா? இப்போது 1000 போலீஸைக் கொண்டு வந்து நிருத்தி இருக்கிறார்கள். எதற்கு? எங்கே காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுக்கவில்லை. பாலியல் வன்கொடுமை நடக்கிறது. கேட்காமல் ஒருவருக்கு இந்த அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கிறது. அப்படியானால் இந்த அரசாங்கம் பயப்படுகிறது.
அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. அதிமுக கட்சியையோ, பொது செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளார் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செய்துள்ளது'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவது ஏன்.? திமுகவை விளாசி தள்ளிய சீமான்..!