×
 

மதக்கலவரத்தை தூண்ட முயற்சி.. எச்.ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்க தயாராகும் காவல்துறை! 

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை தொடர்பாக இரு மதத்திற்கும் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை தொடர்பாக இரு மதத்திற்கும் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை ஆய்வு செய்ய எம்.பி. நவாஸ் கனி தலைமையிலான இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையானது. இதனைக் கண்டித்தும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் கடந்த 4ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததோடு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது, இருப்பினும்  நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்து அமைப்பினர் போராட்டத்தை நடத்தினர். 

அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா, எப்படி ராமஜன் பூமி கோவில் வேற இடத்திற்கு மாற்றினார்களோ, அதைப்போல  இந்த தர்காவை நீங்க வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது இந்துவும் முஸ்லிமும் சகோதர்களாக வாழலாம் என்றெல்லாம் பேசியிருந்தார். எச்.ராஜாவின் இந்த பேச்சு இந்து, முஸ்லீம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர். 

இதையும் படிங்க: “உயிரைக் கொடுத்தாவது... சிக்கந்தர் தர்காவை இடம் மாற்றியே தீருவேன்...” - கொந்தளிக்கும் எச்.ராஜா! 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வகுப்புவாத வன்முறையை தூண்ட முயற்சி, இரு மதத்தினர் இடையே பொது அமைதிக்கு எதிராகவும, பொது அமைதியை குறைக்கும் விதமாகவும் பேசியதாக சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரன் அளித்த புகாரில்  4 பிரிவுகளில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share