தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியின் பிடியில் இருந்த டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பணியாற்றி வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது அதிஷி முதலமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மிய இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை பாஜக முன்னிலை வகுப்பு வரும் நிலையில், தனது 27 ஆண்டுகளுக்கான வெற்றியை பாஜக தன் வசப்படுத்த எதை நோக்கி காத்திருக்கின்றது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை போல் திமுக மிக அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி கட்டாய முறையில் பெறும் என்று நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை
ஆனால், டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி இந்த அளவிற்கு பின்னடைவை சந்திக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் என்றால் அது தேசத்திற்கான பின்னடைவாக தான் கருத வேண்டும்
டெல்லியில் பாஜகவின் ஆட்சி அமையும் எனில் அது தேசத்திற்கான பின்னடைவே என்றும், இந்த வெற்றி தேர்தல் நியாயமாக நடந்து இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்புவதாக தெரிவித்தார். மேலும், இந்திய கூட்டணி கட்டுகோப்பாக இல்லை என்றும், காங்கிரஸ் ஏமாற்றி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை என்பதனாலே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்திய கூட்டணி தலைவர்கள் இது குறித்த தீவிரமாக கலந்தாய்வு செய்dதும், கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களின் ஈகோ பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என்பதனை முன்மொழிந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமன்றி சட்டமன்ற தேர்தல்களிலும் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டும். அதனால் டெல்லி தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த தீவிர ஆலோசனைகள் ஈடுபட வேண்டும் என விசிக வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; மரத்தடியில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்த பிரதமர் மோடி