×
 

திருப்பரங்குன்றத்தில் பேரணி, ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையை சேர்ந்த சையது ராஜா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி கொடுப்பது சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். மேலும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து தர்காவில் வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில், சில அரசியல் அமைப்புகள் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, மதப் பிரச்சினையாக ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

எனவே, இதனை கண்டித்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் வழக்கமான முறையில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து  வழிபாடு நடத்துவதற்கு இடையூறு செய்பவர்களை எதிர்த்து திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் இருந்து பேரணியாக திருப்பரங்குன்றம்  பேருந்து நிலையம் வரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்த  அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திடீர் திருப்பம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயக ரீதியாக அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும், மேலும் அந்த இடத்தில் பல அரசியல் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது, வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கோரிக்கை விடுத்தார். .

அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவாரத்தில் மத மோதல்களை தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சில இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மதப் பிரிவினையை தூண்டு வகையில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக  திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மிகவும் அமைதியான முறையில் வழிபாடுகளை செய்து வருகின்றனர். ஆனால் சம்பந்தமில்லாமல் இயக்கங்கள், கட்சிகள் உள்ளே புகுந்து தொடர்ந்து பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த பகுதி மக்கள் அனைத்து தரப்பினரும் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் தேவை அற்றது என தீர்மானம் நிறைவேற்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் போராட்டம் தேவையற்றது. மேலும் திருப்பரங்குன்றம் கோவில், தர்ஹா  விவகாரத்தில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு போராட்டத்திற்கும்   அனுமதி வழங்க முடியாது என்றார். மேலும் பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே எனக்கூறி நீதிபதி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவது ஏன்.? திமுகவை விளாசி தள்ளிய சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share