சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
சீரமைப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வடிவத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர் குறிப்பாக பணிக்கு செல்பவர்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் பயணிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் இனி ஈசியா சீட் கிடைக்கும்.. 10 நிமிடத்துக்கு முன்பு இதை பண்ணா மட்டும் போதும்.!!
மின்சார ரயில் சேவை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது இதனிடையே சீரமைப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பொன்னேரி, எண்ணூர் வரை அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் நுழைய முடியாது.. ரயில்வே விதிகள் மாற்றம்..