வேலூரில் களைகட்டிய மயான கொள்ளை விழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
வேலூரில் களைகட்டிய வித்தியாசமான மயான கொள்ளை விழாவையொட்டி கடவுள் வேடம் அணிந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மயான கொள்ளை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து பக்தர்கள் அனைவரும் சாமியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் அவர்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள்களின் தோற்றங்களை வேடமட்டு நடனமாடி பரவசமாக சென்றனர்.
இதையும் படிங்க: ஹார்ன் அடிச்சது குத்தமா? சாலையில் வித்தை காட்டிய டியோ இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட முதியவரை அடித்தே கொலை செய்த கொடூரம்..
தொடர்ந்து வேலூர் காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி தேர்தல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் ஊர்வலமாகச் சென்றனர். மேலும் அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் வழிபாடுகளும் நடத்தி அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மயானத்தில் உள்ள பக்தர்களின் முன்னோர் சமாதிகளுக்கு பக்தர்கள் படையெடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனை தரிசித்த பக்தர்கள் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை போன்றவற்றை சூறையீட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக இந்த திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வித்தியாசமான முறையில் இடுகாட்டில் பக்தர்கள் சுவாமி கும்பிட்டு நேத்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தது பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் படிக்க நம்பி வாங்க..! கூவி அழைக்கும் திமுக துரைமுருகனின் பள்ளி..! போட்டு பொளக்கும் பிஜேபி..!