×
 

விஜய் ரசிகர்கள் தந்த செக் பவுன்ஸ்... விளம்பரத்திற்கு வந்து சென்றாரா புஸ்ஸி..? மக்கள் இயக்க நிர்வாகி குடும்பம் கதறல்..!

விஜய் மக்கள் இயக்க லால்குடி ஒன்றிய தலைவராக இருந்து இறந்த அப்பாவிற்கு 20,000 ரூபாய்கான காசோலை கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது மனைவிடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை காசோலையில் பணம் இல்லை என வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் மக்கள் இயக்க லால்குடி ஒன்றிய தலைவராக இருந்து இறந்த அப்பாவிற்கு 20,000 ரூபாய்கான காசோலை கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது மனைவிடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை காசோலையில் பணம் இல்லை என வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ஈர்ப்பாலும், அவர் மீது கொண்டுள்ள பாசத்தாலும்  அடிமட்ட தொண்டர்கள், ரசிகர்கள் அந்தக் கட்சித் தலைவரின் தொண்டர்களாகவும், நடிகர்களின் அடிமட்ட ரசிகர்களாகவும் பலரும் தலைவர்களுக்கு யார் என தெரியாமல் உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு  இன்றளவும் தலைவர்கள், நடிகர்கள் பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதனால் பலருக்கு பலருக்கு நிர்வாகிகள் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. 

அப்படி நடிகரின் அடிமட்ட தொண்டனாக இருந்து தொகுதியின் தலைவராக பொறுப்பேற்று பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து அவர் இறந்த பின்பு அவரது மனைவியிடம் சொற்ப அளவில் வழங்கிய காசோலை மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் வங்கியில் பணம் இல்லை என வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: 'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து கீரமங்கலம் பகுதியை சேர்ந்த கந்தன், பெரியக்கா இவர்களது ஒரே மகன் அப்பாவு இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். நடிகர் விஜய்யின் மீது தீராத அன்பு கொண்டதால் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். மேலும் அவரது செயல்பாடுகள் கருத்தில் கொண்ட நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கத்தில் லால்குடி ஒன்றிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சாதாரண ரசிகராவே இருந்த பொழுது பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த அப்பாவு லால்குடி ஒன்றிய தலைவர் ஆன பிறகு நடிகர் விஜயின் பிறந்தநாள் அன்று ரத்ததானம், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திருச்சி மாநகர் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவருக்கும், விஜய் மக்கள் இயக்கம் லால்குடி ஒன்றிய தலைவர் அப்பாவுவிற்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என மூன்று பேர் உள்ளனர்.

கீரமங்கலத்தை சேர்ந்த அப்பாவு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் பயணித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தாலும், நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்துள்ளார். கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஒன்றிய, மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகளை நடிகர் விஜய் சென்னையில் சந்தித்துள்ளார்.

அங்கு லால்குடி ஒன்றிய தலைவராக இருந்த அப்பாவும் உடல்நிலை குன்றிய போதும் விஜயை சென்று சந்தித்து விட்டு வந்துள்ளார் இதன் பின்னர் 2021 மார்ச் மாதம் 25ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விடுகிறார். இதனால் இவரது மனைவி மாசிலாமணி மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு செய்வது அறியாது கணவனை இழந்து கதறி அழுதுள்ளார்.

 தன்னுடைய பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறோம் என கேள்விக்குறியாகி இருந்து வந்த நிலையில், 2021 ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 20,000 காசோலையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கி உள்ளனர். மேலும் அப்பாவு வின் குடும்பத்தாருக்கு மளிகை சாமான்கள் வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் லால்குடி ஒன்றிய செயலாளராக இருந்த அப்பாவு இறந்த பின்பு அவரது பட திறப்பு விழா சில நாட்களில் வைத்துள்ளனர். அப்போது தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சென்ற போது அந்த கிராமத்தை சேர்ந்த பல இளைஞர்கள் அப்பாவு குடும்பத்திற்கு எதுவும் செய்யவில்லை என கேட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.    

ஆனால் அப்பாவின் மனைவி யாரும் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் அவர் ஆறுதல் தெரிவிக்க வந்துள்ளார் என தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தெரிவித்ததை அடுத்து புஸ்ஸி ஆனந்த், அப்பாவின் மனைவி மாசிலாமணியை சந்தித்து ஆறுதல் கூறி குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வேண்டுமானால் கேளுங்கள், வேறு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்து தருகிறேன் என சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்க லால்குடி ஒன்றிய தலைவராக இருந்த அப்பாவு இறந்த பிறகு கொடுத்த காசோலை தற்போது வரை வங்கியில் பணம் இல்லை என வந்துள்ளது.

தன்னை தைரியப்படுத்திக் கொண்ட அப்பாவின் மனைவி காலையில் பல வீடுகளில் பாத்திரம் தேய்த்தும், அதன் பின்னர் கட்டிட வேலைக்கு சென்று சம்பாதித்து தற்போது வரை அவரது பிள்ளைகளை படிக்க வைத்து காப்பாற்றி வருகிறார். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று கூட ஏதாவது ஒரு கூலி வேலைக்கு சென்று தான் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து வருகிறார். 

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க லால்குடி ஒன்றிய தலைவர் அப்பாவுவின் மனைவி மாசிலாமணி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “எனது கணவர் உடல்நிலை முடியாமல் இருந்த போதும் நடிகர் விஜய் சென்னை வர சொன்னார் என்ற காரணத்திற்காக உடல் நிலையை கருத்தில் கொள்ளாமலும் நடிகர் விஜய் சந்தித்து விட்டு வந்தார் அதன் பின்னர் சில மாதங்களிலேயே உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

அவர் இறந்த பின்பு ரசிகர் மன்றம் சார்பாக 20,000 காசோலை வழங்கினார்கள் அப்போது தனக்கு வழங்கிய காசோலை பெரிதாக இருந்தாலும் தற்போது வரை அது வங்கியில் பணம் இல்லை என வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது சில மாதங்கள் பொருங்கள் வங்கியில் வந்துவிடும் என மூன்று ஆண்டுகளாக தெரிவித்து வருகின்றனர்” என்கிறார். 

தனக்கு அந்தப் பணம் முக்கியம் இல்லை என்றும், ஆனால் மாவட்ட நிர்வாகிகள் உதவி செய்வது போன்று காசோலை கொடுத்துவிட்டு ஏமாற்றுவது நடிகர் விஜய்க்கு தெரியாது, இது அவருக்கு ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய கெட்ட பெயர் என்றும் மாசிலாமணியின் மனைவி தெரிவித்துள்ளார். உண்மை ரசிகனாக இருந்தவரின் குடும்பம் கண்ணீர் கடலில் தத்தளிக்கும் செய்தியைக் கேட்டு தற்போது தவெக தலைவராக இருக்கும் விஜய் அதிரடி ஆக்‌ஷனில் இறங்குவரா? என சோசியல் மீடியாக்களில் கேள்வி எழும்பியுள்ளது. 
 

இதையும் படிங்க: பாமக தலைவர் இல்ல திருமண விழாவில் விஜய் மகன் - பங்கேற்க யார் காரணம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share