மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் வைத்த செக்... ஆதவ் அர்ஜுனாவிற்கு பறந்த அதிரடி உத்தரவு...!
தவெகவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மறு சீரமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மறு சீரமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை மறு சீரமைப்பு செய்ய விஜய் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் மறுசீரமைப்பு பணியை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைக்க திட்டம் தீட்டியிருப்பதாகவும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் தற்பொழுது வரை ஐந்து கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆறாவது கட்டமாக இன்னும் மேற்கொண்டு 25 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டியது இருக்கிறது. இந்த சூழலில்தான் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுக்கான மறு சீரமைப்பு பணியில் ஆதவ் அர்ஜுனா ஈடுபட இருப்பதாக தெரிய வருகிறது. தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் நியமத்திற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கு வந்த சோதனை… சென்னைக்கு வெளியே அனுப்பப்பட்ட நிர்வாகிகள்… குழப்பத்தில் விஜய்..!
இந்நிலையில் இதுவரைக்கும் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 25 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து விஜய் ரசிகர் மன்றம் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்களாக தேர்வு செய்துள்ளார். முக்கியமாக புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் சோசியல் மீடியாக்களில் வீடியோ வெளியிட்டது கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியது.
விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தே உண்மையாக உழைத்த, மக்கள் இயக்கத்தில் களப்பணியாற்றிவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை என்றும், பணம், சாதியை வைத்தே பதவி வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே தான், தவெக தலைவர் விஜய் அடுத்தக்கட்டமாக நியமிக்கப்படவிருந்த 25 மாவட்ட செயலாளர்களின் அறிவிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்தலை சந்திக்கும் அளவிற்கு திறன் உடையவர்களா? இல்லையா? என அவர்களுடைய திறன்களை ஆராய விஜய் முடிவெடுத்துள்ளாராம். அதன் பின்னர் திறமையற்ற மாவட்ட செயலாளர்களை மறு சீரமைப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட செயலாளர்களின் மறு சீரமைப்பு பணியில தமிழகம் முழுவதும் உள்ள 120 மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கவோ அல்லது ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களை அந்த பதவியிலிருந்து நீக்கவோ ஆதவ் ஆர்ஜுனாவிற்கு முழு அதிகாரத்தை விஜய் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்களை கண்காணிக்கும் குழு ஒன்றையும் அமைத்திருந்தார். எந்தெந்த மாவட்ட செயலாளர்கள் எந்தெந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்களா, அவர்கள் குற்றப்பின்னணியில் இருக்கிறார்களா அல்லது குற்றச் செயலில் ஏதேனும் ஈடுபட்டு வருகிறார்களா என்பது குறித்தெல்லாம் என்பதை கண்காணிப்பு குழுவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த குழுவையும் ஆதவ் அர்ஜுனா தான் வழிநடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே மாவட்ட செயலாளர்களின் தகுதி குறித்து ஆராயும் பணியும் ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர் பொறுப்புகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்பது கட்சியினுடைய விதியாக இருக்கிறது.
இந்நிலையிலே அடுத்தடுத்து தேர்தல்கள்ல யாரெல்லாம் நிரந்தர பொதுச் செயலாளர்கள் ஆக்குவதற்காக தேர்வு செய்வார்களோ அவர்களையே முக்கிய மாவட்ட செயலாளர்களாக பரிந்துரைத்திருப்பதாகவும் அவர்களுக்கே அதிகப்படியான பொறுப்புகள் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகிகள் 2026 களம் காணுவதற்கு சரியான நபர்களாக இருப்பார்களா? மற்ற கட்சி அதாவது ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு அவர்களுடைய செயல்பாடு இருக்குமா? என்பதை எல்லாம் கண்காணிக்கவும், மேலும் குற்றப்பிண்ணனில் இருக்கக்கூடிய அல்லது அதிகப்படியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிறவர்களை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வேலைகளிலும் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தகுதி இல்லாத நபர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக மாற்ற அல்லது அவர்களுக்கு மேல் ஒரு பொறுப்பாளரை நியமிக்க தமிழக வெற்றிக் கழக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல விசிகவும், தவெகவும் ஒன்னுதான்... ஆதவ் சொன்னதை ஆமோதித்த திருமா!