×
 

திரௌபதி அம்மன் கோயிலில் பிரச்சனை ஏற்படுத்த முயற்சித்தால் அவ்வளவுதான்.... சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

விழுப்புரம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடர்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிவை திறக்க கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் மூடப்பட்டு சீல் வைக்கபட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் கஞ்சா சேல்ஸ்! கோடு வேர்டு சொன்னால் தான் பொட்டலம்..! சிக்கிய வாலிபர்கள்..!

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை, பூசாரிகள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழா நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, திரவுபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். 

இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share