மோடிக்கு நேருக்கு நேர் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விவேக் ராமசாமி..! "வெப்பம் தாங்கும் கல்" பரிசளித்த எலன் மஸ்க்
அமெரிக்காவில் தற்போது பிரபலமாக இருக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழர் விவேக் ராமசாமியை மோடி சந்தித்தார்.
அகில உலக AI மாநாட்டை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முடித்து பின்னர் அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அமெரிக்காவில் ஹவுஸ்ட்டேன் மாகாணத்தில் உள்ள மிகப்பிரமாண்டமான உள்ளரங்கில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்ற வரவேற்பு கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேசிய மோடி அமெரிக்காவுடன் இணைந்து பல புதிய சாதனைகளை படைக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப் தீவிரவாதம் மற்றும் பல பிரச்சனைகளை இந்தியாவுடன் கைகோர்த்து சந்திக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் சட்ட ரீதியாக அமெரிக்காவுக்குள் யார் வேண்டுமானாலும் குடியேறலாம் ஆனால் முறைகேடாக எல்லை தாண்டி வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முக்கிய அம்சங்கள்! ஓர் அலசல்
பின்னர் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு சென்ற மோடி அங்கு டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்,மோடியும் டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் பரஸ்பர பரிசளிப்புகளை அளித்தனர். அதன் பின்னர் மோடி உலக கோடீஸ்வரர்களில் நம்பர் ஒன் நபரான டெஸ்லா கார் நிறுவனர் எலன் மஸ்க்கை அவரது குடும்பத்தோடு சந்தித்து பேசினார்.
அப்போது எலன் மஸ்க் மோடிக்கு ராக்கெட் களில் அதீத வெப்பத்தை தாங்கும் கல் ஒன்றின் பகுதியை பரிசாக அளித்தார் "ஹீட் ஷீல்ட் டைல்" எனப்படும் அந்தக் கல் ஸ்டார் சிப் ராக்கெட்டின் ஐந்தாவது சோதனையின் போது பயன்படுத்தப்பட்டதாகும். அதேபோன்று எலன் மஸ்க் குடும்பத்திற்கும் அவரது குழந்தைகளுக்கும் மோடி பல பரிசுகளை வழங்கினார் குறிப்பாக பழங்கால இந்திய புத்தகங்களான ரவீந்திரநாத் தாகூரின் தி கிரசன்ட் மூன், தி கிரேட் ஆர் கே நாராயணன் கலெக்ஷன், எனப்படும் கார்ட்டூன் புத்தகம் மற்றும் பஞ்சதந்திரக் கதைகள் பண்டிட் விஷ்ணு சர்மா எழுதியது என பல புத்தகங்களை அந்த குழந்தைகளுக்கு மோடி வழங்கினார்.
பின்னர் அமெரிக்காவில் தற்போது பிரபலமாக இருக்கும் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழர் விவேக் ராமசாமியை மோடி சந்தித்தார். DOGE யிலிருந்து விலகி தற்போது ஓகயோ கவர்னர் பதவிக்கு போட்டியிடப் போகும் விவேக் ராமசாமியிடம் எதிர்கால அரசியல் மற்றும் உலக நிலவரம் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது விவேக் ராமசாமி மோடியின் முன்பாக நேருக்கு நேர் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலை இல்லை.. சமாதானம் மட்டுமே..! மோடியின் பதிலால் ஆடிப்போன ட்ரம்ப்..!