நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது.. பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு டாடா காட்டிய ட்ரம்ப்..
அமெரிக்க அதிபராக பதவியேற்ற நொடியில் இருந்தே அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டோனல்ட் ட்ரம்ப்
ஜோ பைடன் அரசு கொண்டு வந்த திட்டங்களை குறிவைத்து இவையெல்லாம் நாட்டின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எனவே அவற்றை தொடர்ந்து பின்பற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனக்கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அடுத்ததாக வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது, புவி வெப்பமயமாதலை தடுக்க 2015-ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாநாடு நடத்தப்பட்டது. அதில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு மிகாமல் புவியை வைத்திருக்க வேண்டும் என்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது. இதற்காக எத்தகைய ஆலைகளை உலக நாடுகள் நிறுவவுது, அவற்றில் இருந்து வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடு ஆகியவற்றின் அளவு போன்ற பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் அமெரிக்காவும் இணைந்தது.
இதையும் படிங்க: ஒரேயொரு விருந்து, ரூ.2000 கோடி வசூல்..
ஆனால் 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், இந்த பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு மட்டுமே அனுகூலமாக இருப்பதாகவும், வளர்ந்த நாடுகளின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவாகவும் அறிவித்தார். அடுத்த ஜோ பைடன் ஆட்சியின்போது, இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக ட்ரம்ப் நேற்று பதவியேற்ற உடனே, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியமாக பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியாகும் என கூறினார். இரண்டாவது முறையாக இந்த விலகல் முடிவை எடுத்துள்ளார் ட்ரம்ப். இதற்கான முறையான அறிவிப்பையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் வாயிலாக ட்ரம்ப் தெரிவித்து விட்டார். இனி அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகள் அமையவும், இயங்கிக் கொண்டிருக்கிற ஆலைகளின் கரியமில வாயு வெளியேற்றும் அளவும் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டிக்டாக் தடை: 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஏன் தடை செய்தது தெரியுமா?