டைமில்ல, டைமில்ல... உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்... ஒர்க் அவுட் ஆகாத ’மாஸ்டர்’ பிளான்..!
விஜயோட சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டது தான் என்றாலும், அதை எப்போது தொடங்குவது, எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறதாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ் மோகன் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தவெகவின் 2026 ஆம் ஆண்டுக்கான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நாளை நடத்த அக்கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் ஆண்டு தொடக்க விழாவின் போதே விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின.
விஜயோட சுற்றுப்பயணம் திட்டமிட்டப்பட்டது தான் என்றாலும், அதை எப்போது தொடங்குவது, எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறதாம். ஜனவரி மாதமே விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் ஏப்ரல்னு மாறி மாறி தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் நியமன சர்ச்சை வேறு விஜய்க்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. இரண்டாம் ஆண்டு துவக்க விழா முடிச்சிட்டு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுருந்தார்கள். இந்த நிலையில மாவட்ட செயலாளர்கள் நியமனத்தை முடித்துவிட்டு, பூத் கமிட்டி மாநாடு நிறைவு பெற்ற உடனே சுற்றுப்பயணத்திற்கு புறப்பட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு பறந்த வாழ்த்து... என்ன சொன்னார் விஜய்!!
ஜூன் முதல் வாரத்துல விஜய் சுற்றுப்பயணம் செல்ல எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்காம். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம்னு சொல்லப்பட்டாலும் தென்மாவட்ட வாக்குகளை குறிவைச்சு சில முக்கியமான இடங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக அய்யா வைகுண்டர் கோயில், தேவர் நினைவிடம் மாதிரியான குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த வாக்குகளை ஈர்க்கும் பிளானையும் விஜய் போட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.
ஆனால் தற்போது வரை தவெகவில் பதவிக்கு பணம் கேட்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்சனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு சொன்னது போல் சுற்றுப்பயணம் கிளம்புவாரா விஜய் என அவரது கட்சியில் இருப்பவர்களே சந்தேகப் பார்வை பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு புது தலைவலி... தவெக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த சிக்கல்...!