×
 

கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி..! தகாத உறவால் ஆத்திரம்!

கும்பகோணம் அருகே கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி அவரது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்

கும்பகோணம் அருகே கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி அவரது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாதுளம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன். 42 வயதான அவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கலைவாணி. வயது 38. இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் மாரிச்செல்வன், நேச மணிகண்டன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

அன்பரசன் திருபுவனத்தில் உள்ள தனியார் பேக்கரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். அப்போது, அன்பரசனுக்கு திருபுவனத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணத்தை தாண்டிய பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மனைவி கலைவாணிக்கு தெரியவர அவர் அன்பரசனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தைப்பூசம் நாளில் பழனியில் நடந்த பகீர் சம்பவம்... பெண்ணுக்கு நடந்த கோரம்...!

நேற்று இரவும் இதே பிரச்சனை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. சண்டை போட்டுவிட்டு இருவரும் தனித்தனியே படுத்து உறங்கி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் தீராத கலைவாணி, அன்பரசன் தூங்கும் பொழுது அருகே இருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த  கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார், கலைவாணியை கைது செய்தனர். உயிரிழந்த அன்பரசன் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share