×
 

உலக வங்கி, சர்வதேச பண நிதியத்திலிருந்து அமெரிக்கா விலகினால் என்ன நடக்கும்..? விரிவான அலசல்..!

உலக வங்கி, சர்வதேச பண நிதியம்(IMF) ஆகிய அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் நிதிஅமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஜி20 கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதால், அமெரிக்கா இரு அமைப்பிலிருந்து விலகலாம் என்று சர்வதேச ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன. சர்வதேச பண நிதியம், உலக வங்கி ஆகியவற்றில் பெரும்பான்மையான வாக்கு வங்கிகளைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து விலகினால் உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள், வளர்ச்சியடையாத நாடுகளில் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.

உலக வங்கி, ஐஎம்எப் என்றால் என்ன?

2-ம் உலகப் போரின் முடிவில் உலகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், எதிர்காலத்தில் முரண்பாடுகள் ஏற்படாமல் தடுக்கவம் உலக வங்கி, சர்வதேச பண நிதியம் உருவாக்கப்பட்டது. பல ஏழை நாடுகளுக்கு கடைசி ஆபத்பாந்தவன் என்பது சர்வதேச பண நிதியம்தான். அர்ஜென்டினா, இலங்கை,கீரீஸ், கடந்த 1976ம் ஆண்டு பிரி்ட்டன் பணச்சிக்கலில் சிக்கியபோதும் உதவியது ஐஎம்எப்தான்.

இதையும் படிங்க: இந்தியர்களை பாதிக்குமா..! அதிபர் ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ திட்டம் என்றால் என்ன?

உலக வங்கியின் பணிகள் என்பது பல்வேறு நாடுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த குறைந்த வட்டியில் கடன்உதவி செய்வது, ரயில்வே முதல் சூரியசக்தி முதல் கடனுதவி, வளரும் பொருளாதார நாடுகளுக்கு உதவுவது, உலகளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பது போன்றவற்றை செய்கிறது.

ஐஎம்எப் அளிக்கும்  ஒருநாட்டின் ஜிடிபி மற்றும பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை வைத்துதான் சர்வதேச முதலீட்டாளர்கள் அந்நாட்டில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள். ஐஎம்எப் அமைப்பில் குறிப்பிட்ட நாடு கடன் பெற்றிருந்தாலும் அந்தக் கடன் வளர்ச்சிக்கு உதவக்கூடிய கடனா, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான கடனா, பொருளாதார செயல்பாடு என்பதை கணித்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள்.

யாருக்கு ஐஎம்எப் தேவை?

வளர்ந்து வரும் பொருளாதாரச் சந்தையைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு ஐஎம்எப் அவசியம். ஒரு நாடு பொருளாதாரத்தில் நிலைத்திருப்பதற்கும், சரிந்து விழுதலுக்கும் ஐஎம்எப் முக்கியக் காரணம். குறிப்பாக அர்ஜென்டினா, இலங்கை நாடுகளை இன்று இயக்கவைப்பதே ஐஎம்எப் வழங்கும் நிதிதான். பொருளாதாரச் சரிவிலிருந்து இருநாடுகளையும் ஐஎம்எப் நிதிதான் மெல்ல நகர்த்தி வருகிறது.

ஐஎம்எப் தலைமையில் பொருளாதாரத் திட்டமிடல் இருந்தால், அங்கு வளர்ச்சி நிலைத்திருக்கும் என்று நம்பி சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். ஒரு நாடு மற்ற நாட்டுக்கு கடன் வழங்க முடிவு செய்தாலும்கூட கடன் பெறும் நாடு குறித்து ஐஎம்எப் மதிப்பீடு என்ன என்பதை தெரிந்து கொண்டு கடன் வழங்கும். அதற்கும் ஐஎம்எப் மதிப்பீடு அவசியமாகும்.

உலக வங்கி தேவையா?

உலக வங்கியுடன் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள். சர்வதேச நிதிக் கழகம், தனியார்,அரசு இணைந்து முதலீடு செய்வது, குறிப்பாக மின்சக்தி, உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு உலக வங்கியின் கடனுதவி ஒருநாட்டுக்கு அவசியம். வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சியடையா நாடுகள் தங்களின் வளர்ச்சிக்கும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உலக வங்கி அளிக்கும் குறைந்த வட்டிக் கடனை நம்பி இருக்கின்றன.

இந்த உலக வங்கியில் மிகப்பெரிய பங்குதாரராக, அதிகமான வாக்குகளைக் கொண்டதாக அமெரிக்கா இருந்து வருகிறது. எகிப்து, பாகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு உலக வங்கியில் தீவிர ஆதரவாளர்கள். 

அமெரிக்கா வெளியேறினால் என்ன நடக்கும்?

உலக வங்கி, சர்வதேச பண நிதியத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும்பட்சத்தில் அது உலகப் பொருளாதாரத்துக்கு பேரழிவாக மாறும் என்று வளர்ந்துவரும் நாடுகளின் கடன்தர மேலாளர் நியூபெர்கர் பெர்மன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி, ஐஎம்எப் ஆகியவற்றை நிறுவிய உறுப்பினர்களில் அமெரிக்காவும் ஒன்று. ஐஎம்எப் அமைப்பில் 16% பங்குகளையும், உலக வங்கியில் 15 சதவீதத்தையும் அமெரிக்கா வைத்திருக்கிறது. உலக வங்கி, ஐஎம்எப் வகுக்கும் கொள்கைகளை தீர்மானிப்பதில் அமெரிக்க எம்பி.க்கள், செனட்டர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள். அதாவது ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதை ஐஎம்எப் தீர்மானிக்காமல் பின்புலத்தில் இருந்து அமெரிக்க எம்.பி.க்கள் தீர்மானிக்கிறார்கள்.

உலக வங்கி, ஐஎம்எப் அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும்பட்சத்தில் அந்த இடத்தில் ஆதிக்கம் செய்ய சீனா காத்திருக்கிறது. அமெரிக்கா விட்டுச் சென்ற இடத்தை சீனா பிடிக்கும். அமெரிக்கா செய்த அனைத்துப் பணிகளையும் அடுத்தார்போல் உலக அண்ணான இருந்து சீனா முடிவு செய்யும். ஐஎப்எம், உலக வங்கியில் சீனாவின் பங்கு 5%தான் என்றாலும் அந்நாடு ஆதிக்கம் செய்யும்.
 

இதையும் படிங்க: போர் எதிரொலி...ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தது இந்தியா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share