தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ஆம் நாள் அலுவலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து வந்தனர்.இந்த நிலையில், யார் அந்த சார் குறித்தான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி அந்த பெயரை களங்கப்படுத்த வில்லை. எங்களை எல்லாம் ஆளாக்கியவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அங்கு நடைபெற்றிருப்பது மாபெரும் கொடூரம். இது குறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசுகிறார்கள் என்றார்.
இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வழக்கு விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் அந்த சார்? என கேட்குறீங்க. உண்மையாகவே எதிர்க்கட்சி கிட்ட ஆதாரம் இருந்தா புலனாய்வு குழு கிட்ட சொல்லுங்க. அதை விட்டுவிட்டு மாணவிக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்றார்.

சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து தெரிவித்தார். பாலியல் கொடுமையைவிட அதை அரசியலாக்குவது அதைவிட கொடுமையானது மனுநீதி சோழன் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.டிவியில் பார்த்து தெரிந்துகொண்டவர்போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்ல என செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் தெரிவித்தார் .செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் இந்தநிலையில் பேரவையை பார்க்கும் பொழுது 23ஆம் புலிகேசி படம் பார்ப்பது போல் இருக்கிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோயம்புத்தூரின் பல்லடம் பகுதியில் விவசாய குடும்பத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கும் நிலையில் தமிழக அரசை கண்டித்து நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார் .அப்போது வடிவேலின் இடத்தை செல்வ பெருந்தகை பிடித்து விட்டார் வடிவேல் சினிமாவில் இருக்கும் இடத்தை திமுகவின் கூட்டணி எடுத்துக் கொண்டது. முதலமைச்சரை எப்படி புகழ்வது என்று சட்டப்பேரவையை பார்க்கும் பொழுது 23ஆம் புலிகேசி படத்தை பார்ப்பது போல் இருக்கிறது திமுகவின் கூட்டணி கட்சிகள் பேசும் பொழுது 23ஆம் புலிகேசி மன்னனை சுற்றி அமர்ந்து கொண்டு மனதில் சோழன் ஆட்சி நடைபெறுகிறது என கூறுவது இவர்களெல்லாம் உண்மையாகவே மக்களை சந்திக்கிறார்களா? வீதிக்கு வருகிறார்களா? மக்களின் கருத்து என்ன என்பதை பார்க்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ஆஹா.. நல்லா இருக்கே இந்த நாடகம்.. முதலமைச்சரை அறிக்கையில் கதறவிட்ட அன்புமணி ராமதாஸ்