புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 397 சாட்சிகளை விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை ஆமை வேகத்தில் விசாரிப்பாதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வலுத்தது. நடிகர் விஜய் வேங்கை வயல் மக்களை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியான அன்று சார்ஜ் ஷீட்டுக்கு முந்தைய விவர அறிக்கை ஒன்றை சிபிசிஐடி போலீஸார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கைவயல் போலீஸ்காரர் முரளிராஜின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியதாகவும், இதற்கு பழிவாங்கும் வகையில் போலீஸ்காரர் முரளிராஜாவால் சதி திட்டம் தீட்டப்பட்டு அவருடன் இணைந்து சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இச்செயலை செய்ததாக சிபிசிஐடி போலீசாரால் புதுக்கோட்டை சிறப்பு நிதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கைக்கு முந்தைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!

இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வேங்கைவயலை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்றைய நாளில் இருந்து தலைமறைவானதால் பணிக்கு வரவில்லை. பணிக்கு வராதது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் போலீஸ்காரர் முரளிராஜாவை விட்டோடி (தலைமறைவு) என்று அறிவித்து எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீஸ்காரர் முரளிராஜாவை விட்டோடி என அறிவித்து அவரது வீட்டுவாசலில் அறிவிப்பு ஆணையை போலீசார் ஒட்டினர்.

போலீஸ்காரர் முரளி ராஜா தலைமறைவானதால் அவர்தான் குற்றவாளி என்பது தெளிவாகிறது. குற்றம் செய்யாதவர் தலைமறைவாகவேண்டி அவசியமில்லை. அதே நேரம் வேங்கை வயலை சேர்ந்தவர்களையே குற்றவாளியாக்கியதால் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம் - தனிமனித மோதலே காரணம்... நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்