செப்பறை அழகிய கூத்தர் கோயில், தமிழகத்தின் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இராஜவல்லிபுரம் ஊராட்சியில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நடராஜர் கோயில் ஆகும். இக்கோயில் திருநெல்வேலி நகரத்திற்கு வடக்கே 12.2 கிலோ மீட்டர் தொலைவிலும், தாழையூத்திற்கு கிழக்கே 9.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான வேண்ட வளர்ந்த நாதர் சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். இலிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இத்தலம் நடராஜரின் பஞ்ச சபைகளில் தாமிர சபை ஆகும். இச்சபையில் விஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படைவீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி செப்பறை அழகிய கூத்திர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது
திருவிழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து பொடி பட்டம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசன திருவிழா வேத மந்திரங்கள் பஞ்சவாத்தியம் இசைக்க கொடியேற்றப்பட்டது தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள் பால் தயிர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது.

பின்னர் சுவாமி அழகிய கூத்தருக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் இத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதியும் ஆருத்ரா தரிசனம் வரும் 13ஆம் தேதி அதிகாலையும் நடைபெறுகிறது
இதையும் படிங்க: நெல்லையப்பர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ..மெய்சிலிர்க்க வைத்த கொடியேற்றம் ..!
இதையும் படிங்க: அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா.. திமுகவினர் ஒட்டிய போஸ்டர்.. பரபரக்கும் நெல்லை!