தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் மூன்று மொழிக் கொள்கையால், திமுக தலைமையிலான மாநில அரசுக்கும், பிஜேபி தலைமையிலான மத்திய அரசிற்கும் இடையான மொழிப்போர் விவாதம் மீண்டும் தலை தூக்கி உள்ளது.
கல்வியையும் அரசியலையும் பின்னிப்பிணைக்கும் இந்த சம்பவம், நிதி மோதலின் மையமாக உள்ளது. இது குறித்த துல்லியமான பார்வை இதோ..

மூன்று மொழிக் கொள்கை என்றால் என்ன?
தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி(NEP 2020) மாணவர்கள் மூன்று மொழிகளை கற்க வேண்டும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். இது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும். மாநிலங்கள் எந்த மொழியையும் கட்டாயம் இன்றியும், திணிப்பின்றி தேர்ந்தெடுக்கலாம்.
இதையும் படிங்க: திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்த தர்மேந்திர பிரதான்.. உச்சகட்ட பதற்றத்தில் அறிவாலயம்.. வானதி சீனிவாசன் பொளேர்!
மூன்று மொழிக் கொள்கையின் வரலாறு என்ன?
1964-66 ஆண்டுகளில் கோத்தாரி ஆணையம் முன்மொழிந்து,1968-ல் இந்திரா காந்தி ஆட்சியில் NPE-யாக உருவானது.1986-ல் ராஜீவ் காந்தி,1992-ல் நரசிம்ம ராவ் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு, பிராந்திய மொழி, இந்தி மொழியுடன் ஒற்றுமையை மேம்படுத்த இந்தக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது .

தேசிய கல்விக் கொள்கை NEP 2020, மூன்று மொழிக் கொள்கை பற்றி என்ன சொல்கிறது?
பன்மொழித்திறனுக்கு மூன்று மொழிகளை கற்பது அவசியமாகிறது, எந்த மொழியும் திணிக்கப்படாது. மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் அந்தந்த பகுதிகளையும் மொழியை அடிப்படையாக வைத்து மாணவர்கள் தேர்வு செய்யலாம். இரண்டு இந்திய மொழிகளாகி, அரசியலமைப்பு, இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு மொழிகள் பற்றி என்ன சொல்கிறது இந்த சட்டம்?
மேல்நிலை பள்ளியில், இந்திய மொழிகள், ஆங்கிலத்துடன் கொரியன், ஜப்பானிய, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்கலாம்.
தமிழ்நாட்டின் எதிர்ப்பு என்ன?
1937-ல் ராஜகோபாலாச்சாரி இந்தியை கட்டாயமாக்கியபோது, நீதிக்கட்சி, பெரியார் ஆகியோர் தரப்பிலிருந்து போராட்டங்கள் எழுந்தன. 1968-ல், அண்ணாதுரை தமிழ்-ஆங்கில கொள்கையை ஏற்று, இந்தி திணிப்பாக கருதி மறுத்தார். இந்தப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது.

புதிய தூண்டுதல் ஏன்?
தேசிய கல்விக் கொள்கை NEP 2020-ஐ எதிர்ப்பதால், மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்திற்கான கல்வி நிதி ரூ.573 கோடி நிதியை நிறுத்தியது. SSA விதிகள், 60% மத்திய நிதிக்கு திட்டங்களை ஒப்புக்கொள்ள கோருகின்றன.
தமிழ்நாட்டின் மொழி சுயாட்சி பாதுகாப்பிற்கும், மத்திய அரசின் கல்வி ஒற்றுமை முயற்சிக்கும் இடையேயான இந்த மோதல், மூன்று மொழிக் கொள்கையை சித்தாந்த மற்றும் ஆட்சி முரணின் வெளிப்பாடாக இது காட்டுகிறது.
இதையும் படிங்க: தர்மேந்திர பிரதானே ஆணவப் பேச்சுக்கு மன்னிப்பு கேள்.. சிபிஎம் கடும் விமர்சனம்.!