இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் துறைசார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. வினாவிடை நேரம் முடிந்த பின்னர் பேசிய முதலமைச்சர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் கூட்டம் பற்றிய விவரங்களை உறுப்பினர்களிடம் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது...
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: இங்கே வந்து இப்படியா பேசுவது..? பஞ்சாப் முதல்வரின் பேச்சால் கடுப்பான மு.க.ஸ்டாலின்..!

வட மாநிலங்களில் எந்த விகிதத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்..

கடந்த 22-ந் தேதி சென்னையில் தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
மேலும் ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 1971-ம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: இதை செய்ய திமுகவுக்கு தில் இருக்கா?... நெஞ்சில் அடித்து சவால்... அமித் ஷா ருத்ரதாண்டவம்!