டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்த செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாபட்டி கிராம மக்களை நேரில் சந்திக்கவுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க 2023ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. இதனையடுத்து 2024ம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்க குத்தகைக்காக உரிமம் வழங்குவர்தற்கான ஏல அறிவிப்பு வெளியானது. 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிங்க் இந்துஸ்தான் நிறுவனம் ஏலத்தை வென்றது. ஆனால் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராட்டத்தில் இறங்கினர்.

இதனையடுத்து அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி சட்டப்பேரவையில் திமுக அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தான் பதவியில் இருக்கும் வரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய விடமாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

இதையும் படிங்க: Tirupathi Stampede: நாட்டையே உலுக்கிய 6 பேரின் மரணம்; சோகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு!
இதனிடையே, கடந்த 23ம் தேதி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்தார். மக்களுக்கு கிடைத்த வெற்றியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாபட்டி செல்ல உள்ளார். நாளை நண்பகல் 12 மணி அளவில் அரிட்டாபட்டி போராட்டக்காரர்களை முதல்வர் சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இஸ்ரோ தலைமை பொறுப்பில் கலக்கும் தமிழர்கள்...! உலகையே திரும்பி வைக்க இந்தியர்; வி.நாராயணுக்கு ஸ்டாலின் வாழ்த்து!