ஜனவரி 27ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்
திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் மக்களுடன் நடிகர் தாடி பாலாஜி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தளபதிக்காக எப்போ வேணாலும் எங்க வேணும்னாலும் செல்ல தயாராக இருப்பேன் , தளபதிக்காக உயிர் உள்ளவரை உழைத்துக் கொண்டே இருப்பேன் எ,ன்னுடைய தோளில் நான் அவரை சுமக்க வேண்டும் என்பதற்காகவே பச்சை குத்திக் கொண்டேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய தாடி பாலாஜி ஜனவரி 27 விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அந்த சுற்றுப்பயணம் செல்லும் போது மக்களை நேரடியாக சந்தித்து பெரும் புரட்சி செய்வார் என்றும் கூறினார்
மேலும் வயசை பொருட்படுத்தாமல் புஸ்ஸி ஆனந்த் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் அவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி தெரிவித்தார் .
இதையும் படிங்க: விசிக - திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. சொல்லி அடிக்கும் திருமா
இதையும் படிங்க: மக்களை சந்திக்க தயாராகும் விஜய் ..பரபரப்பை கிளப்பிய தவெக தாஹிரா