இந்தியாவின் பொது போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்காற்றுகிறது. தொழில்துறை மற்றும் ஐடி துறையின் முன்னோடியாக விளங்கும் ஹைதராபாத்திற்கு தினம்தோறும் இலட்சக்கணக்கானோர் ரயில் மூலம் சென்னையில் இருந்து பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சராசரியாக 12 மணி நேரம் ஆகக்கூடும். என்ன நிலையில் பயணிகளின் பயணத்தை மேம்படுத்தவும் பயண நேரத்தை குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு அதிவேக ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால் தற்போது 10 மணி நேரமாக உள்ள பயண நேரம் பெங்களூருவுக்கு இரண்டு மணி நேரமாகவும் சென்னைக்கு இரண்டு மணி 20 நிமிடம் ஆகும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமான பயண நேரமே ஒரு மணி நேரமாக உள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் செலவிட்டால் ரயில் பயணத்திலேயே சென்று விடலாம் என்கின்ற அறிவிப்பை ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிடப்பில் இருக்கும் காரைக்கால் பேரளம் ரயில் பாதை.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே நிர்வாகம்..!

தற்போது சரக்கு ரயில்களும் அதிவேக ரயில்களும் ஒரே பாதையில் ஏக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிவேக ரயில்களுக்கு பிரத்தியேக வழிதடங்கள் உருவாக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹைதராபாத் சென்னை வழித்தடம் 205 கிலோ மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இந்த ரயில் சராசரியாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் சென்னை அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க பொதுத்துறை நிறுவனமும் பொறியியல் ஆலோசனை நிறுவனமான RITES இறுதி நில ஆய்வுக்கான டென்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடைய 15 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிடப்பில் இருக்கும் காரைக்கால் பேரளம் ரயில் பாதை.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே நிர்வாகம்..!