41 நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் 12 நாடுகளுக்கும் அதன்பின் படிப்படியாக நாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தடைக்குள் கொண்டுவரவும் அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த 41 நாடுகளையும் 3 பிரிவுகளாக பிரித்து தடையை அமல்படுத்த உள்ளனர்.

முதல் பிரிவில் 10 நாடுகள் உள்ளன, இதில் ஆப்கானிஸ்தான், சிரியா, கியூபா,வட கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. அதைத் தொடர்ந்து எரிடேரியா, ஹெய்தி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு சில விதி விலக்குகளுடன் பகுதி தடையும் விதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: யார் இந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன்..? அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட இந்திய மாணவி..! என்ன காரணம்..?
3வது பிரிவில் 26 நாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதில் பெலாரஸ், பாகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பகுதி தடையும், 60 நாட்களுக்குள் அந்நாட்டு அரசுகள் ஏதேனும் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிரந்தரத் தடையும் விதக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ இந்த நாடுகளின் பட்டியலில் மாற்றம் வரலாம், ஏனென்றால், இந்த இறுதியான பட்டியலும் இல்லை, இன்னும் அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. குறிப்பாக உள்துறை அமைச்சகம்ஒப்புதல் அளி்க்கவில்லை” எனத் தெரிவித்தனர்.
அதிபராத முதல்முறை டொனால்ட் ட்ரம்ப் வந்தபோது, 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்தார். 2வது முறையாக அதிபராக ட்ரம்ப் வந்தபோது, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வரும்போது, அவரால் பாதுகாப்புக்கு சிக்கல் இருக்குமா என்று ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரமுண்டு என்று தெரிவித்தார்.
எந்தெந்த நாடுகளுக்கு முழுமையாக தடைவிதிக்கலாம், பகுதியாக தடைவிதிக்கலாம் என்பது குறித்து கேபினெட் அமைச்சர்கள் குழு வரும்21ம் தேதி இறுதிப்பட்டியலை அதிபர் ட்ரம்பிடம் வழங்கும். அந்த பட்டியல் மீது ஆலோசனை நடத்தப்பட்டு இறுதியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நல்லவேளை, பிரதமர் மோடி இதையெல்லாம் பார்க்கல..! வாஷிங்டனை சுத்தம் செய்யுங்கள்.. அதிபர் ட்ரம்ப் மக்களுக்கு அழைப்பு..!