செபியின் தலைவராக இருந்த மாதபி பூரி புச் பதவிக்காலம் இன்று (பிப்28) முடிவடைவதையடுத்து, செபியின் அடுத்த தலைவராக பாண்டேவை மத்திய அரசு நியமித்துல்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு,செபியின் புதிய தலைவராக பாண்டேவை நியமிப்பதற்கான ஒப்புதலை இன்று வழங்கியது. அதில் “ நிதி மற்றும் வருவாய் துறை செயலர் துஹின் கந்தா பாண்டேவை செபியின் தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமித்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

செபியின் புதிய தலைவராக வருவதற்கு துஹின் பாண்டே தவிர்த்து, பொருளாதார விவகாரத்துறை செயலர் அஜெய் சேத், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர் பங்கஜ் ஜெயின், செபியின் முழுநேர உறுப்பினர் கேசி வர்ஷ்னே ஆகியோர் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செபியின் தலைவராக இருக்கும் மாதவி பூரியின் பதவிக்காலம் மார்ச் 1ம் தேதி முடிவடைகிறது, 3 ஆண்டுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட மாதவி பூரி மீது அந்நிய முதலீடு குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: 200 லோடு செம்மண் மாயம்... ரூ.30 லட்சம் திருட்டு... ஊருக்கு முன் நாறிப்போன திமுக தலைவர் Vs து.தலைவர் மோதல்..!
2017ம் ஆண்டு முதல் 2022 வரை செபியின் தலைவராக அஜெய் தியாகியும், அதற்கு முன் 6 ஆண்டுகளாக தலைவராக யு.கே.சின்ஹாவும் இருந்தனர்.1987ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் பாண்டே, பாண்டே பஞ்சாப் பல்கலைக்கழக்தில் முதுநிலை பொருளாதாரம் படிப்பும், பிரிட்டனிந் பிரிம்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் படித்தவர்.

இதற்கு முன் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை, நிதிஅமைச்சகத்தின் கீழ் வரும் பொது நிறுவனங்கள் துறை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இதற்கு முன், ஐநாவின் தொழில் மேம்பாட்டு அமைப்பிலும் பாண்டே பணியாற்றி இருந்தார். நிதி ஆயோக் அமைப்பின் இணைச் செயலாளராகவும், அமைச்சரவை செயலர், வர்தத்கத்துறை துணைச் செயலராகவும் பாண்டே பணிபுரிந்துள்ளார்.
ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரியான பாண்டே, அந்த மாநிலஅரசில் சுகாதாரம், பொது நிர்வாகம், வர்த்தகம், வரி நிர்வாகம், போக்குவரத்து, நிதி ஆகியதுறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு... 6 மொழிகளில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு.. முதல் நாளிலேயே அமளி..!