திண்டுக்கல் மாவட்டம் வீரசின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜா ராம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் அட்டகாசம் செய்து வந்துள்ளது. ராஜா ராம் மாந்தோப்பு மட்டும் இன்றி நெல் உள்ளிட்ட பயிர் வகைகளையும் விளைவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த குரங்குகள் பயிர்கள், மாம்பழங்களில் உள்ளிட்ட அனைத்தையும் நாசம் செய்யவே குரங்குகளை விரட்ட ராஜாராம் பல திட்டங்களை கையாண்டு உள்ளார். ஆனால் ராஜாராமுக்கு எந்த திட்டங்களும் பலன் அளிக்காமல் நீடித்துள்ளது. இதனால் செய்வது அறியாத ராஜாராம் வீர சின்னம்பட்டியை அடுத்த தவசிமடை வடுகப்பட்டியை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியின் உதவியை நாடியுள்ளார்.

முன்னதாக ராஜாராம் குரங்குகளை கொல்ல தட்ட மட்டும் உள்ளார். அதற்காகவே ராஜா ராம் தொழிலாளி ஜெயமணியை சந்தித்ததாக பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது. நமது நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி வனவிலங்குகளை கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இதனை அறிந்தோம் ராஜா ராம் குரங்குகளை கொல்ல முயற்சித்தது அதிர்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க: குரங்கு செய்த சேட்டை! இலங்கையே இருளில் மூழ்கியது: நடந்தது என்ன?
முன்னதாக, ராஜாராம் அவரது தோட்டத்தில் உள்ள குரங்குகளை கொல்வதற்கு ஜெயமணிக்கு ராஜாராம் முன்பணமாக ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஜெயமணி அவரிடம் இருந்தால் நாட்டுத் துப்பாக்கியால் குரங்கை சுற்று கொண்டுள்ளார். பின்னர் இது வெளியில் தெரிந்தால், பெரும் பிரச்சனையாகிவிடும் என நினைத்து ராஜாராம் மற்றும் ஜெயமணி குரங்கை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதனை அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான வனத்துறையினர் வடுகப்பட்டி பகுதியில் உள்ள ஜெயமனியை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது ராஜாராம் பணம் கொடுத்ததும் குரங்கை கொன்றதையும் ஒப்பு கொண்டதால் இருவரையும் வனதுறையினர் கைது செய்தனர். மேலும் ஜெயமணியின் நாட்டு துப்பாக்கி வெடி மருந்து உள்ளிட்டவைகளையும், சமைக்கப்பட்ட குரங்கின் தோல் உள்ளிட்ட உதிரி பாகங்களையும் போலீசார் கைப்பற்றி தீவர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் இருக்கும்வரை தவெகவுக்கு டெபாசிட்கூட கிடைக்காது..! நிர்வாகிகள் அதிருப்தி..!